News March 2, 2025

234 தொகுதிகளிலும் கண்டன பொதுக்கூட்டம்: உதயநிதி

image

மத்திய அரசைக் கண்டித்து திமுக இளைஞரணி சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என Dy CM உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
புதிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு, நிதிப் பகிர்வில் பாரபட்சம் உள்ளிவற்றைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக அவர் கூறினார். மேலும், 234 சட்டசபைத் தொகுதிகளிலும் இந்த போராட்டத்தை முன்னெடுக்க இளைஞரணி நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News March 17, 2026

மன்னிப்பு கேட்ட பார்த்திபன்!

image

தனது <<19404740>>சாதி அடையாளத்தை<<>> பேசிய பார்த்திபனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில், இதற்கு பார்த்திபன் வருத்தம் தெரிவித்ததுடன் மன்னிப்பு கேட்டு ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில், தனது பற்று தமிழ் மீது இருந்தாலும் தனது பிறப்பை எப்படி மாற்ற முடியும் என்று கூறியுள்ளார். விழாவில் பதற்றத்தில் எதோ பேசிய விட்டதாகவும் அதை பெரிய பிரச்னையாக மாற்றாமல் அப்படியே விட்டுவிடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

News March 17, 2026

ஸ்பீட் போஸ்ட்.. புதிய சேவைகள் அறிமுகம்

image

‘24 ஸ்பீட் போஸ்ட்’ மற்றும் ‘48 ஸ்பீட் போஸ்ட்’ என்ற புதிய சேவைகளை இந்தியா போஸ்ட் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி இன்று முதல் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் கிடைக்கும். தபால் / பொருட்கள் 24 மணி நேரம் & 48 மணி நேரத்துக்குள் உறுதியாக டெலிவரி செய்யப்படும் என்றும் இதில் தாமதம் ஏற்பட்டால் செலுத்தப்பட்ட பணம் திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

News March 17, 2026

வியாழக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை

image

லீவு என்றாலே பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சிதான். அந்த வகையில், இந்த வாரத்தில் 3 நாள்கள் விடுமுறையாகும். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி அரசு விடுமுறையாகும். இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை, ஞாயிற்றுக்கிழமை என அடுத்தடுத்து லீவுதான். 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு நெருங்கி வருவதால், விடுமுறையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள் மாணவர்களே!

error: Content is protected !!