News March 18, 2024
கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை திரண்ட எம்.புதூர் பகுதி மக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, எங்கள் பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கி மீது பொய் வழக்கு பதிவு செய்வதையும் அது மட்டும் இன்றி அவர்கள் மீது குண்டர் தடுப்பு காவலில் கைதி செய்ய போவதாக தகவல் வந்ததை அடுத்து அதனை ரத்து செய்ய வலியுறுத்தி தர்ணா போராட்டம், என்றனர்.
Similar News
News December 30, 2025
கடலூரில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது – எஸ்பி தகவல்

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 307 குட்கா போதைப்பொருட்கள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 403 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 6,224 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 11 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று(டிச.29) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News December 30, 2025
கடலூர்: அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலம்

கடலூர் மாவட்டம், கரிக்குப்பம் கிராமத்தில் உள்ள மறைக்காயர் குளத்தில், 50 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவரது சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, சடலத்தை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 30, 2025
கடலூரில் இன்று மின்தடை ரத்து!

கடலூர் மாவட்டம், நத்தப்பட்டு மற்றும் நல்லாத்தூர் ஆகிய துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாகவும் இதனால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் இன்று (டிச.30) அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.


