News February 12, 2025
உடலுக்கு வலிமை தரும் புரதம்
இந்திய உணவுமுறை பெரும்பாலும் மாவுச்சத்தை (Carbohydrate) மையப்படுத்தியது. அரிசி, கோதுமை என அனைத்திலுமே மாவுச்சத்தே அதிகம். ஆனால், மாவுச்சத்தை குறைத்து, புரதத்தை உணவில் அதிகம் சேர்த்தால் தசைகள் வலுப்பெற்று, கொழுப்பு குறையும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். உடலுழைப்பு இல்லாத ஒருவர், நாளொன்றுக்கு ஒரு கிலோ உடல் எடைக்கு 0.8 கிராம் புரதம் உட்கொள்ள வேண்டுமாம். நீங்கள் போதுமான புரதம் எடுக்கிறீர்களா?
Similar News
News February 13, 2025
பிறந்தநாள் வாழ்த்து ஃபோட்டோ அனுப்புங்க
இன்று (பிப்.13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!
News February 13, 2025
நடிகருக்கு பெண் தொடர்பு: கலங்கி நின்ற பிரபல நடிகை
ஒருகாலத்தில் தீவிரமாக காதலித்து வந்த நடிகை மனிஷா கொய்ராலாவும், ‘காலா’ பட வில்லன் நானா படேகரும் பிரிந்த கதை மீண்டும் வைரலாகி வருகிறது. ஏற்கெனவே திருமணமான நானா படேகர், தன்னுடன் நடித்த ஆயிஷா ஜுல்கா என்ற நடிகையுடனும் தொடர்பிலிருந்த போது, மனிஷாவிடம் ஒருநாள் கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறார். வெறுத்துப்போன மனிஷா, ‘ஒழிஞ்சு போ…’ என்று சொல்லி, அன்றே படேகரை விட்டுவிலகி பழகுவதை நிறுத்திக் கொண்டாராம்.
News February 13, 2025
தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது: தமிழிசை
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை தெரிவித்துள்ளார். பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் வென்று, தமிழகத்தை காவி நிச்சயம் ஆளும் என்றார். தமிழகத்தில் பெரியார் தமிழை வளர்க்கவில்லை என்றும், பெரியாழ்வார் வளர்த்த தமிழ்தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். குடும்பத்துக்கான ஆட்சியை அகற்றிவிட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்காக நடைபெறும் ஆட்சி விரைவில் அமையும் என்றும் கூறியுள்ளார்.