News April 16, 2024
பிற்போக்குத்தனமாக வழக்குத் தொடர்வதா?

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி வழங்கப்படும் செங்கோலை, கோயில் அறங்காவலர் ருக்மணியிடம் (கைம்பெண்) வழங்கக்கூடாது எனத் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. கோயிலுக்குள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? செங்கோல் வாங்குபவரும் இந்து தானே எனக் கேள்வி எழுப்பிய கோர்ட், இன்றைய நவீன உலகில் பிற்போக்குத்தனமாக வழக்குத் தொடர்வதா என மனுதாரருக்கு கண்டனம் தெரிவித்தது.
Similar News
News November 10, 2025
விவசாயத்தில் நல்ல லாபம் பார்க்கணுமா? இதோ வழி!

பயிர்களை இடைத்தரகர்கள் இல்லாமல், நேரடியாக விற்பனை செய்ய இ-நாம் (e-NAM) அரசு செயலி உதவுகிறது. இதன்மூலம் லாபம் முழுவதும் விவசாயிகளுக்கே செல்லும். இதற்கு இச்செயலியில் நீங்கள் அறுவடை செய்த பயிரின் தகவலை உள்ளிடவேண்டும். ஒருவேளை நீங்கள் விவசாயி இல்லையெனில், செயலியில் வர்த்தகராக பதிவு செய்யலாம். விவசாயிகளிடமிருந்து பயிர்களை வாங்கி, அதை உணவு நிறுவனங்கள்/ சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்கலாம். SHARE.
News November 10, 2025
SIR மூலம் திமுகவை அழிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

SIR மூலம்தான் திமுகவை அழிக்க முடியும் என சிலர் நினைக்கிறார்கள்; அந்த முயற்சி ஒருபோது எடுபடாது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். SIR-ஐ எதிர்க்க அதிமுகவுக்கு தைரியம் இல்லை என சாடிய அவர், DMK தொடர்ந்த வழக்கில் தங்களையும் இணைக்கக்கோரி ADMK மனு தாக்கல் செய்தது கபட நாடகம் என விமர்சித்தார். மேலும், உண்மையிலேயே அக்கரை இருந்தால் அதிமுக முன்கூட்டியே வழக்கு தொடர்ந்து இருக்கலாமே என்றும் கேள்வி எழுப்பினார்.
News November 10, 2025
Magic அரிசி: சமைக்காமல் அப்படியே சாப்பிடலாம்!

அரிசியை வேக வைத்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் ஊறவைத்த பின் சமைக்காமல் அப்படியே சாப்பிடும் அரிசி தெரியுமா? அசாமின் கோமல் சால் எனப்படும் மந்திர அரிசி தான் அது. இதை தண்ணீரில் 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்தால் போதும். சாதம் பதத்துக்கு மாறிவிடும். இதன் பயன்பாடு காலப்போக்கில் குறைந்த நிலையில், சமைக்க நேரமில்லாமல் ஓடும் மக்களால், மீண்டும் இதற்கு மவுசு கூடியுள்ளது. ஆன்லைனில் கூட விற்பனை தொடங்கியுள்ளது.


