News March 27, 2024
பல மடங்கு உயர்ந்த சு.வெங்கடேசனின் சொத்து

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வேங்கடேசன் 2019ஆம் ஆண்டு தேர்தலின்போது ₹13 லட்சம் சொத்து வைத்திருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்தமுறை அவரது சொத்து மதிப்பு 2 கோடி ரூபாய் என வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார். சு.வெங்கடேசனின் சொத்து மதிப்பு சுமார் 15 மடங்கு உயர்ந்தது எப்படி என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Similar News
News December 8, 2025
சண்டை போடாதீங்க கம்பீர்.. Ex. வீரரின் அட்வைஸ்!

SA ODI தொடருக்கு பின் நடந்த பிரஸ் மீட்டில் இந்திய அணியின் கோச் கம்பீர், சரவெடியாக விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். இப்படி ஒருவரை விமர்சிப்பது, கம்பீர் தன் மீதான விமர்சனத்திற்கு இடமளிப்பது போல் உள்ளதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். டீம் தோற்றால் அதற்கு கம்பீரை மட்டுமே குறை சொல்ல முடியாது என கூறிய அவர், இத்தனை சண்டைகளில் கம்பீர் ஈடுபட வேண்டியதில்லை எனவும் அட்வைஸ் செய்தார்.
News December 8, 2025
நீதி வென்றதாக நடிகர் திலீப் கண்ணீர்

பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதி வென்றுள்ளதாக <<18502283>>வழக்கில் இருந்து விடுதலை<<>> செய்யப்பட்ட நடிகர் திலீப் உணர்ச்சி பொங்க கூறியுள்ளார். எர்ணாகுளத்தில் பேசிய அவர், பொய்யான வழக்கால் சினிமாவில் தனது புகழ், நற்பெயரை சீர்குலைக்க நினைத்தவர்களின் எண்ணம் பொய்யாகிவிட்டது என்றார். மேலும், இந்த வழக்கிற்காக கடந்த 9 ஆண்டுகளாக தனக்கு துணை நின்ற சினிமா, சட்ட நிபுணர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
News December 8, 2025
பள்ளி மாணவி மயங்கி விழுந்து மரணம்

தென்காசி, உடையாம்புளி பகுதியில் பள்ளிக்கு புறப்பட்ட 9-ம் வகுப்பு மாணவி பாலகிருஷ்ணவேணி (13) மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பிறக்கும்போது இதயத்தில் பிரச்னை இருந்துள்ளது. அதற்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். இந்நிலையில், இன்று காலை அம்மாவிடம் சொல்லிவிட்டு ஆசை ஆசையாக கிளம்பிய அவர், அப்படியே மயங்கி கீழே விழுந்த உடன் உயிரிழந்துள்ளார்.


