News May 1, 2024
முறையான தூக்கம் இருதயத்தை பாதுகாக்கும்

தினமும் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுவது, நிம்மதியான தூக்கம், போதுமான தூக்கம் ஆகியவை இருதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொதுவாக மனிதர்களுக்கு 8 மணி நேர தூக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இரவு 10 முதல் காலை 6 மணி வரை தினமும் முறையாக கடைபிடித்தால் பெரும்பாலான நோய்களில் இருந்து விடுபடலாம் என்கிறது ஆய்வு. நீங்கள் முறையாகத் தூங்குகிறீர்களா?
Similar News
News February 2, 2026
H.ராஜாவின் உடல்நலம் எப்படி இருக்கிறது?

மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் H.ராஜாவுக்கு, சென்னை அப்போலோவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று CM ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்த நிலையில், இன்று வானதி சீனிவாசனும் அவரை சந்தித்துள்ளார். அவர் விரைவாக உடல்நலம் தேறி வருவதாக SM-ல் பதிவிட்டுள்ள வானதி, மீண்டும் களத்திற்கு அவர் திரும்ப வர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
News February 2, 2026
பங்குச் சந்தையில் ஒரே நாளில் ₹10 லட்சம் கோடி இழப்பு

மத்திய பட்ஜெட் தாக்கலால் விடுமுறை நாளான நேற்றும் பங்குச் சந்தைகள் இயங்கின. ஆனால், முதலீட்டாளர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இடம்பெறாததால் சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவை சந்தித்தன. இதனால், நேற்று ஒரு நாளில் மட்டும் முதலீட்டாளர்கள் ₹10 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளனர். வரி விலக்கு அறிவிப்பால் சில மருந்து நிறுவனங்களின் பங்குகள் மட்டும் ஏற்றமடைந்துள்ளன.
News February 2, 2026
BREAKING: திருப்பரங்குன்றம் வழக்கு.. மன்னிப்பு கேட்டார்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற முன்னேற்பாடுகளை செய்யாத அலுவலர்கள் மீது நடவடிக்கை கோரி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நேரில் ஆஜரான மதுரை கலெக்டர், மதக்கலவரம் ஏற்படும் சூழல் இருந்ததாக தகவல் வந்ததாலேயே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்; வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


