News November 20, 2024

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணைக்கு தடை

image

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தனக்கு எதிரான சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை கோரி ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேசன் சர்வீசஸ் நிறுவனம் 2006இல் ஏர்செல் நிறுவனத்தில் ₹3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு அப்போதைய FM ப.சிதம்பரம் விதிகளை மீறி அனுமதி அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

Similar News

News August 29, 2025

₹5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறும் அசத்தல் திட்டம்

image

உங்கள் வீட்டில் உள்ள முதியவர்களுக்கு மருத்துவ செலவு அதிகமாக இருக்கிறதா? மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் மூலம் அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை பார்க்கலாம். இத்திட்டத்தின் மூலம் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச சிகிச்சைக்காக ஆண்டுக்கு 5 லட்சம் வரை கிடைக்கிறது. இதற்கு விண்ணப்பிக்கும் முறையை அறிந்துக்கொள்ள <<17550991>>க்ளிக் பண்ணுங்க<<>>. SHARE.

News August 29, 2025

ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறை

image

ஆயுஷ்மான் பாரத் கார்டை பெற, https://pmjay.gov.in -க்கு செல்லவும் ▶மெனுவில் ’Am I Eligible?’என்பதை க்ளிக் செய்யுங்கள் ▶மொபைல் எண்ணை உள்ளிட்டு, OTP மூலம் சரிபார்க்கவும் ▶”PMJAY” திட்டத்தைத் தேர்வு செய்து, உங்கள் விவரங்களை உள்ளிடவும் ▶”Do e-KYC” என்பதைத் தேர்ந்தெடுத்து, “ஆதார் OTP” மூலம் உங்கள் அடையாளத்தை சரிபார்க்கவும் ▶”Download Card” என்பதை தேர்ந்தெடுத்து ஆயுஷ்மான் கார்டை பதிவிறக்கவும்.

News August 29, 2025

BREAKING: ₹2,500ஆக உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

image

தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ₹2,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ₹2,500, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ₹2,545-க்கும் கொள்முதல் செய்யப்படும் என்றும் வரும் செப்.1 முதல் 2026 ஆக. 31 வரை இந்த உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

error: Content is protected !!