News May 16, 2024

ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை

image

ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 2009இல் அமைச்சராக இருந்த போது வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக அவர் மீது புகார் எழுந்தது. அந்த புகாரை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு விசாரணை செய்த நிலையில், தற்போது வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 29, 2025

Cinema Roundup: விரைவில் ‘பராசக்தி’ பர்ஸ்ட் சிங்கிள்

image

*’பராசக்தி’ பர்ஸ்ட் சிங்கிள் வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல். *யஷ்-ன் ‘டாக்ஸிக்’ படத்தின் பெரும்பாலான காட்சிகளை ரீ-ஹூட் செய்ய படக்குழு முடிவு. *மிருணாள் தாக்கூரின் ‘டகாய்ட்’ படம் மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு. *மாரி செல்வராஜுக்கு ‘இயக்குநர் திலகம்’ என வைகோ பட்டம் சூட்டியுள்ளார்.

News October 29, 2025

அரசியலில் குதிக்கிறாரா MS தோனி?

image

மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இணையமைச்சர் ரக்‌ஷா கட்சே, தோனியை சந்தித்துள்ளார். டெல்லியில் உள்ள MSD-ன் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு நடந்துள்ளது. அப்போது, விளையாட்டில் உளவியல் ரீதியான பயிற்சிக்கான மேம்பாடு & விளையாட்டுகளுக்கான கட்டமைப்புகளை மேம்படுத்துதல் குறித்து பேசியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சந்திப்பு அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படுகிறது.

News October 29, 2025

அக்டோபர் 29: வரலாற்றில் இன்று

image

*உலக பக்கவாத நாள்.
*1832 – பெங்களூரில் நிலை கொண்டிருந்த பிரிட்டிஷ் படையினருக்கு எதிராக நடத்தப்படவிருந்த சிப்பாய்களின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.
*1886 – பிரிட்டிஷ் இந்திய அரசு – திருவாங்கூர் மன்னர் இடையே முல்லைப் பெரியாறு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தானது.
*1931 – கவிஞர் வாலி பிறந்தநாள்.
*1950 – கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தொடர் கல்கி இதழில் முதல்முறையாக வெளிவர ஆரம்பித்தது.

error: Content is protected !!