News April 8, 2024

ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை

image

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீட்டுவசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, 3 மாதத்தில் முடிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பெரியசாமி தரப்பு மேல்முறையீடு செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது கீழமை நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News January 20, 2026

சற்றுமுன்: விஜய்க்கு நெருக்கடி

image

ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால், விஜய் தரப்பு அடுத்தடுத்து நெருக்கடியை சந்தித்து வருகிறது. இப்போது கூடுதல் நெருக்கடியை படத்தின் OTT உரிமத்தை வாங்கியுள்ள அமேசான் நிறுவனம் கொடுத்துள்ளது. அதாவது படத்தின் ரிலீஸ் தேதியை தெளிவுபடுத்தவில்லை எனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நிறுவனம் எச்சரித்ததாக சென்னை ஐகோர்ட்டில் ஜன நாயகன் படக்குழு தெரிவித்துள்ளது.

News January 20, 2026

கிரீன்லாந்தில் அமெரிக்க கொடியை நாட்டிய டிரம்ப்

image

கிரீன்லாந்தில் US தேசிய கொடியை ஏந்தி நிற்பதுபோல், AI படத்தை டிரம்ப் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் கிரீன்லாந்து, வெனிசுலா, கனடா நாடுகளை US-ன் ஒருபகுதியாக காட்டும் AI படத்தையும் வெளியிட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை கைப்பற்றும் டிரம்ப்பின் முயற்சியால், ஏற்கெனவே US-EURO இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டிரம்ப்பின் AI படங்கள் மோதல் சூழலை ஏற்படுத்தியுள்ளது.

News January 20, 2026

PM மோடி மீதும் வழக்கு: ராமதாஸ் தரப்பு

image

பாமகவின் பெயர், சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை கோரி சென்னை HC-ல் ராமதாஸ் தரப்பில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி பேசிய ராமதாஸ் தரப்பு வக்கீல், ஜன.23-ல் TN வரும் PM மோடி, கூட்டணி குறித்து அன்புமணியிடம் பேசினால் அவர் மீதும் வழக்கு தொடர்வோம் எனக் கூறினார். மேலும், அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி அமைத்தது சட்டவிரோதம் என்ற அவர், பாமகவின் தலைவர் ராமதாஸ் மட்டுமே எனக் கூறினார்.

error: Content is protected !!