News August 15, 2024
சவுக்கு சங்கர் மீதான விசாரணைக்கு தடை

சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பெண் போலீசை அவதூறாக பேசியது, கஞ்சா வைத்திருந்தது உள்பட 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது. மேலும், வழக்கின் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 9, 2025
தமிழ்நாட்டை சூழ்ந்திருக்கும் ஆபத்து: CM ஸ்டாலின்

தமிழ்நாட்டை SIR எனும் ஆபத்து சூழ்ந்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல கோடி மக்களின் வாக்குரிமையை SIR கேள்விக்குறியாக ஆக்கியுள்ளதாக கூறிய அவர், தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க கண்ணும் கருத்துமாக பணிபுரிய வேண்டும் என மா.செ.க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து SIR-க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
News November 9, 2025
தமிழ் நடிகர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

ஆசையாக அப்பாவை சந்திக்க சொந்த ஊருக்கு சென்ற சின்னத்திரை நடிகர் பேரரசு(21), கடலூர், ஆண்டிக்குப்பம் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் உயிரிழந்தார். இவர், ‘உப்பு புளி காரம்’ வெப் சீரிஸ் மூலம் பிரபலமானதோடு, உதவி இயக்குநராகவும் பணிபுரிந்து வந்தார். வளர்ந்து வந்த இளம் நடிகரை இழந்துவிட்டோம் அவருடன் ‘உப்பு புளி காரம்’ தொடரில் நடித்த சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News November 9, 2025
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் படத்தில் புது அப்டேட்!

நடிகர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் படத்தின் டைட்டில் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு, தமன் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழி படமாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.


