News October 13, 2025
ஆட்சிக்கு வந்த 1 மணிநேரத்தில் மதுவிலக்கு ரத்து: PK

பிஹாரில் ஆட்சிக்கு வந்த அடுத்த ஒரு மணிநேரத்தில், மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என ஜன் சுராஜ் தலைவர் பிரசாந்த் கிஷோர்(PK) வாக்குறுதி அளித்துள்ளார். மதுவிலக்கால் ஆண்டுக்கு ₹28,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது, மதுப்பிரியர்களை குறிவைத்து வீசும் அம்பு என ஆதரவு, எதிர்ப்பு கருத்துக்கள் கிளம்பியுள்ளன. பிஹாரில் 2016 முதல் மதுவிலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 13, 2025
தொடர்ந்து சரியும் சந்தைகள்.. முதலீட்டாளர்கள் கலக்கம்!

வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிந்து 82,300 புள்ளிகளிலும், நிஃப்டி 67 புள்ளிகள் சரிந்து 25,217 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Tata Motors, ONGC, Dr Reddys Labs, Jio Financial, TCS, SBI உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
News October 13, 2025
திமுகவுக்கு அந்த ராசி கிடையாது: ஜெயக்குமார்

சென்னையில் அதிமுக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஜெயக்குமார், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் இடுப்பை உடைத்து உட்கார வைப்போம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், நாம் (அதிமுகவினர்) ஒற்றுமையாக இருந்தால் அதிமுகவை விட பெரிய சக்தி எதுவுமே கிடையாது எனக் கூறிய அவர், திமுக ஒரு தடவை ஆட்சிக்கு வந்தால், மீண்டும் ஆட்சிக்கு வராது, அதுதான் திமுகவின் ராசி என்று சாடினார்.
News October 13, 2025
கமலாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

விஜயகாந்த் இல்லத்தை தொடர்ந்து, பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கும், கவர்னர் மாளிகைக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. கடந்த சில நாள்களாகவே, CM, EPS, விஜய் மற்றும் நடிகர், நடிகைகளின் வீடுகளுக்கு தொடர்ந்து மிரட்டல் வருவது குறிப்பிடத்தக்கது.