News August 18, 2024

தொழில்முறை பெற்றோருக்கு ₹3.43 லட்சம் சம்பளமாம்!

image

பணக்கார சீன தம்பதிகள் குழந்தைகளுக்கான கடமைகளை நிறைவேற்ற தொழில்முறை பெற்றோர்களை நியமிக்கின்றனர். குழந்தையின் மன ஆரோக்கியம், கல்வித் திறன் மற்றும் அவர்களின் அன்றாட தேவைகளில் கவனம் செலுத்துவதற்காக நியமிக்கப்படும் தொழில்முறை பெற்றோர்கள், தோராயமாக மாதம் ₹1,17,000 முதல் ₹3,43,000 வரை சம்பளம் பெறுகின்றனர். இவர்கள் ஹார்வர்ட், கேம்பிரிட்ஜ் போன்ற மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் பயின்றவர்களாக உள்ளனர்.

Similar News

News August 14, 2025

வேற லெவலில் உருவாகும் SK படம்: வெங்கட் பிரபு அப்டேட்

image

சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் படம் குறித்த தகவலை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார். இதுவரை SK நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், இப்படத்திற்கான திரைக்கதை பணிகள் முடிந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வித்தியாசமான கதையம்சத்தில் இப்படம் இருக்கும் எனவும், அதே சமயம் அனைவரும் விரும்பி பார்க்கும் படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

News August 14, 2025

மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் நாளை டெபாசிட்!

image

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை(KMUT) திட்டத்தின் 24-வது தவணை ₹1,000 பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நாளை(ஆக.1 5) செலுத்தப்பட உள்ளது. 1.15 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் 15-ம் தேதி வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. நாளை பொது விடுமுறை என்பதால் இன்றே பணம் வரவு வைக்கப்படுமா என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், வழக்கம்போல் நாளையே வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 14, 2025

கவர்னர் எனும் நச்சுப் பாம்பு மூலம் குடைச்சல்: KN நேரு

image

BJP, தங்களுக்கு வேண்டாத மாநிலங்களில் கவர்னர் எனும் நச்சு பாம்பை அனுப்பி குடைச்சல் கொடுப்பதாக அமைச்சர் KN நேரு சாடியுள்ளார். மேலும், TN-க்கு RSS அனுப்பி வைத்த கைக்கூலி RN ரவி என கடுமையாக விமர்சனம் செய்துள்ள அவர், அவமானங்களை மட்டுமல்ல தொடர் தோல்விகளையும் தாங்கிக் கொள்வது அரிய கலை எனவும் விமர்சித்துள்ளார். TN அரசு குறித்த RN ரவியின் அறிக்கையை படித்தால் அமித்ஷாவே சிரிப்பார் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!