News October 4, 2025
அண்ணாமலை சென்ற விமானத்தில் சிக்கல்..

அண்ணாமலை உட்பட 100-க்கும் மேற்பட்டோர் சென்ற விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் பதற்றம் உருவானது. சென்னையில் இருந்து மதுரை சென்ற இந்த விமானம் லேண்டாக வேண்டிய கடைசி நிமிடத்தில் மீண்டும் மேல் நோக்கி பறக்க தொடங்கியது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அதிகப்படியான வெப்ப அலை இருந்ததால் விமானம் தரையிறக்கப்படவில்லை. 13 நிமிடங்கள் கழித்து மீண்டும் விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
Similar News
News October 4, 2025
குழந்தைக்கு Cough Syrup கொடுப்பதற்கு முன்..

2 வயது வரை குழந்தைகளுக்கு Cough Syrup கொடுக்க வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு டாக்டரின் ஆலோசனையின் படி Syrup கொடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன், டாக்டர் பரிந்துரைக்கும் டோஸ் அளவில் மட்டுமே Syrup-ஐ கொடுக்க வேண்டும் எனவும் வெவ்வெறு மருந்துகளை ஒரே நேரத்தில் கொடுக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். இதனை அனைவருக்கும் பகிருங்கள்.
News October 4, 2025
சற்றுமுன்: விஜய்க்கு உச்சகட்ட பாதுகாப்பு

தவெக தலைவர் விஜய்க்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகத்தில் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கரூர் பரப்புரையின்போது அவர் மீது செருப்பு, தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. இதுகுறித்து அவரின் பாதுகாவலர்களிடம் நேற்று அறிக்கை கேட்கப்பட்டிருந்த நிலையில், Z பிரிவு பாதுகாப்பு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
News October 4, 2025
மூத்த அரசியல் தலைவர் காலமானார்

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராமேஷ்வர் துடி (62) உடல்நலக் குறைவால் காலமானார். ராஜஸ்தான் அரசியலில் முக்கிய பங்காற்றிய இவர் MP-யாகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மூளையில் ரத்தக்கட்டு ஏற்பட்டதால் 2023-ல் இவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின்னர் சுயநினைவற்று கடந்த 2 ஆண்டுகளாக கோமாவில் இருந்த நிலையில், அவர் உயிர் பிரிந்துள்ளது. RIP