News June 27, 2024
மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பதில் உள்ள சிக்கல்

மத்திய அரசு பட்டியலில் மொத்தம் 2,479 பிற்படுத்தப்பட்ட சாதிகள் உள்ளன. மாநில பட்டியலின்படி 3,150 சாதிகள் இருக்கின்றன. இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதி தொடர்பான கேள்வியைக் கேட்டால், மக்கள் தங்கள் குலம், கோத்ரம், துணை சாதி என ஒன்றுக்கொன்று மாறுபட்ட வகையில் தரவுகளை வழங்குவதால் கணக்கெடுப்பு தரவுகளில் குழப்பம் ஏற்படும் என இது தொடர்பான வழக்கு ஒன்றில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.
Similar News
News March 2, 2026
தமிழக தேர்தல் தேதி.. வெளியானது Update

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் மொத்தமாக 5 கட்டங்களாக தேர்தல் நடத்த ECI திட்டமிட்டுள்ளது. அதன்படி, அடுத்தவாரம் தேர்தல் தேதியை CEC ஞானேஷ் குமார் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. கடந்த முறை போன்று ஏப்ரலில் அல்லாமல், மே மாதமே தேர்தல் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
News March 2, 2026
விஜய் பட தயாரிப்பாளருக்கு வந்த அடுத்த சோதனை!

ஜனநாயகனை அடுத்து யஷின் ’டாக்ஸிக்’ படத்தை தயாரித்துள்ளது KVN நிறுவனம். அப்படம் ரீலிசாகும் மார்ச் 19-ம் தேதி அன்று ’துரந்தர் 2’-ம் ரிலீசாகிறது. டாஸ்ஸிக் ரன்னிங் டைம் 3.25 மணி நேரமாகவும், துரந்தர் 2 ரன்னிங் டைம் 3.40 மணி நேரமாகவும் இருப்பதால் எந்த தியேட்டரிலும் கூடுதல் காட்சிகள் திரையிட முடியாத நிலை. இதனால் தியேட்டர் ஓனர்கள் படத்தின் ரன்னிங் டைமை குறைக்க கோரி KVN-க்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
News March 2, 2026
குழந்தைகள் இருக்கும் வீட்டில் கண்டிப்பா இது இருக்கணும்

மக்களே, உங்கள் வீட்டில் 3 வயதுக்கு கீழ் குழந்தைகள் இருக்காங்களா? இவர்கள் கதவை திறந்து மூடும்போது கண்டிப்பாக கை விரல்களை நசுக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதனால், கைகள் வீங்குவதோடு, சில நேரங்களில் எலும்பு முறிவு கூட ஏற்படலாம். உங்கள் பிஞ்சு குழந்தையின் பிஞ்சு விரல்களை காக்க ஆன்லைனில் கிடைக்கும் Door guard/ Door stopper-ஐ பயன்படுத்தலாம். அனைவருக்கும் யூஸ் ஆகும். SHARE THIS.


