News April 25, 2024
பிரதமர் மோடிக்கு சிக்கல்?

ராஜஸ்தானில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் சொத்துகள் மறுபங்கீடு செய்யப்பட்டு இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் என பேசியது சர்ச்சையானது. பிரதமரின் வெறுப்புப் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், தேர்தல் ஆணையத்தில் பலர் புகாரும் அளித்தனர். இந்நிலையில், இந்தப் புகார் மனுக்கள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 4, 2026
வள்ளலார் பொன்மொழிகள்

*பசிபோக்குவதே ஜீவகாருண்யம் *வாக்கு வேறு, மனம் வேறு, செய்கை வேறு என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள் *பல்லாயிரம் சொற்களை உபசாரமாகப் பேசுவதைவிட, முகமலர்ச்சியுடன் ஒருவரைப் பார்த்தாலே நம்மைச் சந்திப்பவர் மகிழ்வார் *நல்லோர் மனதை நடுங்கச் செய்யக் கூடாது. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தக் கூடாது. நட்புக்கு வஞ்சகம் செய்யக் கூடாது.
News March 4, 2026
பிறந்த ஊரிலேயே புதைக்கப்படும் கமேனி?

போரில் கொல்லப்பட்ட கமேனியின் இறுதிச்சடங்கு ஈரானில் உள்ள மஷாத் நகரில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள இமாம் ரேசா புனித தளத்தில் கமேனியின் உடல் புதைக்கப்படவுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன. அதேஇடத்தில் தான் கமேனியின் தந்தை கல்லறையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. கமேனியின் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை ஈரான் அரசு செய்து வருகிறது.
News March 4, 2026
தமிழகத்தில் சாதி வெறியாட்டம் அதிகரிப்பு: ரவிக்குமார் MP

சாதி ரீதியான மோதல்களை தடுப்பதில் காவல்துறை மெத்தனமாக இருக்கக் கூடாது என ரவிக்குமார் MP தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சாதி வெறியாட்டம் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்ட அவர், இதற்கு பாஜக போன்ற மதவாத சக்திகள் வலுப்பெற்றதே காரணம் என குற்றஞ்சாட்டினார். மேலும், சாதிய வன்கொடுமைகளை தடுக்க நீதிபதி சந்துரு அளித்த பரிந்துரைகளை முழுமையாக தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


