News April 15, 2024
பாஜக எம்.எல்.ஏ.வுக்கு சிக்கல்

கடந்த 6ஆம் தேதி நெல்லை விரைவு ரயிலில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ.4 கோடி, நெல்லை பாஜக வேட்பாளரும், எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரனின் பணம் என FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது பணம் இல்லை என நயினார் மறுத்திருந்த நிலையில், இது அவரது பணம் தான்; வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக செல்லப்பட்டதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அவரின் அடையாள அட்டை நகலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News September 16, 2025
நீ ஊருக்கே கிளம்பு: PAK-கிற்கு நோ சொல்லும் ICC?

போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்டை மாற்ற வேண்டும் என்ற PAK கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ICC நிராகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த <<17723508>>IND vs PAK<<>> போட்டியில், டாஸின் போது, இரு கேப்டன்களை கைகொடுக்க விடாமல் செய்ததாகவும், அவரை நீக்காவிட்டால், தொடரில் இருந்து வெளியேறுவோம் என்றும் பாக்., கூறியிருந்தது. ஆனால், இந்த சர்ச்சையில் நடுவர் எந்த பங்கையும் வகிக்கவில்லை என ICC தரப்பு கருதுகிறது.
News September 16, 2025
அக்.1 முதல் கட்டணம் உயர்கிறது

ஆதாரில் உள்ள தகவல்களை மாற்றுவதற்கான கட்டணம் அக்.1 முதல் உயர்கிறது. ஆதாரில் உள்ள புகைப்படத்தை மாற்ற வசூலிக்கப்படும் கட்டணம் ₹100ல் இருந்து ₹125-ஆக உயரும் எனவும், மற்ற தகவல்களை மாற்றுவதற்கான கட்டணம் ₹50ல் இருந்து ₹75-ஆக உயரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக ஆதாருக்கு அப்ளை செய்பவர்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
தேர்தல் பணிகளை துரிதப்படுத்தும் பாஜக

சென்னையில் இன்று பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. பி.எல் சந்தோஷ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் 2026 தேர்தல் கூட்டணி, பூத் கமிட்டி பணிகள், கட்சியில் நிலவும் கருத்து வேறுபாடுகள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளன. இதில் நயினார் நாகேந்திரன், பாஜக எம்.எல்.ஏக்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பலர் பங்கேற்கவுள்ளனர்.