News October 15, 2025
Pro Kabaddi League: ஒரு புள்ளியில் தோற்ற தமிழ் தலைவாஸ்

புரோ கபடி லீக் தொடரில் உபி உத்தாஸ் அணியிடம் 1 புள்ளி வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் தமிழ் தலைவாஸ் புள்ளிகளை குவித்த நிலையில், உபி வீரர்கள் அபாரமாக ஆடி அதை கட்டுப்படுத்தினர். முதல் பகுதியில் தமிழ் வீரர்கள் அதிக புள்ளிகள் எடுத்தாலும், 2-வது பகுதியில் உபி வீரர்களின் கையே ஓங்கியது. இறுதியில் 32-31 புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் தோல்வியடைந்தது.
Similar News
News January 7, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 573
▶குறள்:
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். ▶பொருள்: பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.
News January 7, 2026
பாஜக IT செல் APP-ஐ பயன்படுத்தும் ECI: மம்தா

SIR பணிகளை எதிர்த்து வரும் மே.வங்க CM மம்தா பானர்ஜி ECI பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். மே.வங்கத்தில் வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்காக, பாஜக IT செல் உருவாக்கிய மொபைல் APP-ஐ ECI சட்டவிரோதமாகப் பயன்படுத்துகிறதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தகுதியான வாக்காளர்களை இறந்தவர்களாகக் காட்டுவது, வயதானவர்கள் நேரில் அழைப்பது என ஜனநாயகத்திற்கு விரோதமாக ECI செயல்படுவதாகவும் மம்தா சாடியுள்ளார்.
News January 7, 2026
திருப்பரங்குன்றம் தீபத்தூண் தீர்ப்பை கண்டித்துள்ள CPM

திருப்பரங்குன்றம் <<18776534>>தீர்ப்பு <<>>நீதி பரிபாலன முறை எதிரானது CPM மாநில செயலாளர் பெ. சண்முகம் விமர்சித்துள்ளார். புதிதாக ஒரு இடத்தில் ஏன் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை மனுதாரரும் சொல்லவில்லை, கோர்ட் தீர்ப்பிலும் சொல்லவில்லை எனவும் குறிப்பிட்டார். TN அரசை குற்றம்சாட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் கோர்ட் செயல்பட்டுள்ளதாகவும், இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


