News November 20, 2024

புரோ கபடி லீக்: புனேரி பால்டன் – உ.பி யோதாஸ் ஆட்டம் டிரா

image

புரோ கபடி லீக் தொடரில் புனேரி பால்டன் – உ.பி யோதாஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ‘டிரா’ ஆனது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. இதனால் ஆட்டம் 29-29 என்ற புள்ளிகள் கணக்கில் டிராவில் முடிந்தது. 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஹரியானா அணி 11 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மும்பை மற்றும் பாட்னா அணிகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

Similar News

News March 13, 2026

தருமபுரியில் பயங்கர தகராறு!

image

தருமபுரி: காரிமங்கலம் அருகே வழிப்பிரச்சினையில் அதிமுக பிரமுகர் ராமச்சந்திரன் (54) மீது முருகன் மற்றும் அவரது மனைவி தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த ராமச்சந்திரன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருதரப்பு புகார்களின் அடிப்படையில், ராமச்சந்திரன் தரப்பு உட்பட மொத்தம் 5 பேர் மீது காரிமங்கலம் காவல்துறையினர் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 13, 2026

கிருஷ்ணகிரியில் வாலிபர் துடிதுடித்து பலி!

image

பர்கூர் அடுத்த ஒரப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மதன்ராஜ். இவர் தனது இருசக்கர வாகனத்தில் பெங்களுரு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பின்னால் வந்த ஈச்சர் வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 13, 2026

நாகை: பைக் வாங்க விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

image

உலமாக்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 16 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.25,000-லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!