News December 4, 2024
புரோ கபடி லீக்: குஜராத் Vs பெங்களூரு ஆட்டம் டிரா

புரோ கபடி லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா ஆனது. புனேவில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளுமே தொடக்க முதல் சிறப்பாக விளையாடின. இதனால் இந்த ஆட்டம் 34-34 என்ற புள்ளிக்கணக்கில் சமனிலையில் முடிந்தது. இந்த தொடரில் 12 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், ஹரியானா அணி 61 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
Similar News
News December 8, 2025
புஸ்ஸி, ஆதவ் போட்டியிடவுள்ள தொகுதி இதுவா?

புதுச்சேரியிலும் தன்னுடைய அரசியல் ஆட்டத்தை ஆடிவருகிறது தவெக. இந்நிலையில், ஆதவ், புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் புதுச்சேரியில் போட்டியிட திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி உப்பளத்தில் ஆனந்த் போட்டியிடலாம் என பேசப்படும் நிலையில், ஆதவ் எத்தொகுதியை குறிவைக்கிறார் என்பதை பற்றிய தகவல்கள் கசியவில்லை. ஆனால் சார்லஸ் மார்ட்டினுக்கு எதிராக இவர் களமிறங்கலாம் என கூறப்படுகிறது.
News December 8, 2025
ஃபிரிட்ஜில் இதையெல்லாம் வைக்குறீங்களா? பேராபத்து!

நறுக்கிய காய்கறி மற்றும் பழங்களை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். ஃபிரிட்ஜின் கூலிங்கான நிலை, கிருமிகள் பரவவும், அவை வெகு நேரம் உயிர்வாழ்வதற்கான உகந்த சூழலையும் அளிக்கிறது. எனவே நறுக்கி வைத்திருக்கும் பழங்களில் நிச்சயமாக கிருமிகள் பரவியிருக்கும். இதை நீங்கள் சாப்பிட்டால், தொற்று ஏற்பட்டு, ஃபீவர், ஃபுட் பாய்சன் கூட ஆகலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். விழிப்புணர்வுக்காக அனைவருக்கும் SHARE IT.
News December 8, 2025
கோவா தீ விபத்து: 4 பேர் கைது, 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

<<18492944>>கோவா தீ விபத்து<<>> தொடர்பாக, விடுதி நிர்வாகத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், தீ பாதுகாப்பு விதிகளை இரவு விடுதி பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, பாதுகாப்பு விதிமீறல்களை கண்டுகொள்ளாமல் அனுமதி அளித்த 3 அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சம்பவம் குறித்த முழு அறிக்கையை விசாரணைக்குழு ஒருவாரத்தில் சமர்ப்பிக்கும் என CM பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.


