News December 6, 2024

புரோ கபடி லீக்: தபாங் டெல்லி Vs உ.பி. யோத்தாஸ் ஆட்டம் டிரா

image

புரோ கபடி லீக் தொடரின் இன்று நடைபெற்ற தபாங் டெல்லி – உ.பி. யோத்தாஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா ஆனது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 32-32 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது. இதை தொடர்ந்து மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – யு மும்பா அணிகள் விளையாடி வருகின்றன. இந்த தொடரில் 62 புள்ளிகளுடன் ஹரியானா அணி முதலிடத்தில் உள்ளது.

Similar News

News November 7, 2025

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயின் நன்மைகள்!

image

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பல வித உடல்நல பிரச்னைகளுக்கு இது சுவையான தீர்வாக அமையும் என்றும் கூறப்படுகிறது. இதை சாப்பிட்டால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை போட்டோக்களாக கொடுத்துள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்க்கவும்.

News November 7, 2025

அன்புமணி புதிய கட்சி தொடங்கலாம்: ராமதாஸ்

image

பாமக பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணி பக்கம் உள்ள கும்பலில் 21 பேர் இருப்பதால், அதை பயன்படுத்தி அவர் புதிய கட்சி தொடங்கி கொள்ளட்டும் என்று ராமதாஸ் அறிவுரை வழங்கியுள்ளார். அக்கட்சிக்கு பொருத்தமான பெயரை தானே சொல்வதாகவும், ஆனால் அன்புமணிக்கு பாமகவுடனும், தன்னுடனும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், ராமதாஸ் கூறியுள்ளார்.

News November 7, 2025

பாஜக மீது சாஃப்ட் கார்னர் காட்டும் விஜய்?

image

கரூர் துயருக்கு பிறகு BJP மீது விஜய் சாஃப்ட் கார்னர் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். பரப்புரைகளில் பாசிசம் என BJP-ஐ விமர்சித்து வந்த விஜய், தற்போது பொதுக்குழுவில் அதே மாதிரி ஒரு வார்த்தையை கூட பயன்படுத்தவில்லை என்கின்றனர். SIR-க்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்தில் கூட EC-ஐ மட்டுமே சாடியுள்ளதால் ADMK-BJP கூட்டணிக்கு விஜய் அச்சாரம் போடுகிறாரோ என்ற சந்தேகம் எழுவதாக தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!