News July 15, 2024
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கு பரிசு

தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தியதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கட்டண உயர்வின் மூலம் மின்வாரியத்துக்கு ஆண்டுக்கு ₹6,000 கோடிக்கும் கூடுதலாக வருமானம் கிடைக்கும் எனக் கூறிய அவர், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்காக மக்களுக்கு கொடுத்துள்ள பரிசு தான் இந்த கட்டண உயர்வு என விமர்சித்துள்ளார். கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் பாமக போராட்டம் நடத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
தி.மலையில் இது கட்டாயம்; ஆட்சியர் போட்ட உத்தரவு!

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, அன்னதானம் வழங்குமா? உணவுப் பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு பெற்று அன்னதானம் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை சாா்பில், அன்னதானம் வழங்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
News November 24, 2025
ஷுப்மன் கில் எப்போது அணிக்கு திரும்புவார்?

தெ.ஆ., அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் தீவிர சிகிச்சையில் இருந்துவரும் அவர் இதுவரை எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவர் மீண்டும் எப்போது அணிக்கு திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மும்பையில் பிரபல முதுகுத்தண்டுவட சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை பெற்றுவரும் அவர், 2026-ல் தான் அணிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.
News November 24, 2025
BREAKING: மொத்தம் 17 மாவட்டங்களில் விடுமுறை

கனமழை எதிரொலியால் மேலும் 3 மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, <<18372068>>14 மாவட்டங்களுக்கு<<>> விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிதாக மதுரை, அரியலூர், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளனர். இன்னும் சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


