News November 23, 2024

கிட்டத்தட்ட உறுதியான பிரியங்கா வெற்றி

image

வயநாடு இடைத் தேர்தலில் காங்கிரஸின் பிரியங்கா காந்தி 85,000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். மொத்தம் 1,25,000 வாக்குகள் எண்ணப்பட்டிருக்கும் நிலையில், கம்யூனிஸ்ட் வேட்பாளர் 40,000 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறார். இதனால், பிரியங்கா காந்தியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது.

Similar News

News November 1, 2025

செங்கோட்டையனுக்கு எதிராக ஆதாரம் வெளியிட்ட EPS

image

கடந்த 6 மாதங்களாக அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு வந்ததாலேயே செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாக இபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார். அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடர்பாக விவசாயிகள் நடத்திய நிகழ்ச்சியில், MGR, ஜெயலலிதாவின் போட்டோ இல்லை என நிகழ்ச்சியை புறக்கணித்த செங்கோட்டையன், கருணாநிதி போட்டோவுடன் இருந்த சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார் எனக் கூறி ஆதாரத்தை காட்டினார்.

News November 1, 2025

தனக்கு தானே அழிவை தேடிக்கொள்ளும் EPS: டிடிவி

image

EPS தனக்கு தானே அழிவை தேடிக்கொள்கிறார்; அவர் வீழ்ந்து விடுவார் என்று டிடிவி தினகரன் கடுமையாக சாடியுள்ளார். இப்போது இருப்பது அதிமுக அல்ல; எடப்பாடி திமுக (EDMK) என விமர்சித்த அவர், செங்கோட்டையன் தீவிரமான அதிமுக தொண்டன், திறமையான நிர்வாகி. அவரை நீக்கும் அளவுக்கு EPS-க்கு தகுதியில்லை என்றும் கொந்தளித்தார். 2026-ல் EDMK வீழ்த்தப்படுவது உறுதி; இதை யாராலும் தடுக்கமுடியாது எனவும் எச்சரித்தார்.

News November 1, 2025

‘No Shave November’ வரலாறு தெரியுமா?

image

நவம்பரில் ‘No Shave November’ ட்ரெண்டை பின்பற்றும் பலருக்கும் அதன் நோக்கம் தெரியாது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவே இது 2009-ல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. ஒரு மாதம் தாடி, மீசை சவரம் செய்யாமல், அந்த செலவை சேமித்து, நோயாளிகளின் சிகிச்சைக்கு நன்கொடையாக வழங்குவதே இதன் நோக்கம். நீங்களும் இந்த ‘No Shave November’ ட்ரெண்டை ஃபாலோ செய்கிறீர்களா?

error: Content is protected !!