News January 31, 2025

தாயாருக்காக களமிறங்கிய பிரியங்கா

image

பட்ஜெட் உரையை குடியரசு தலைவரால் முழுமையாக வாசிக்க கூட முடியவில்லை, பாவம் என சோனியா காந்தி சொன்னது சர்ச்சையானது. PM மோடி உள்பட பாஜக மூத்த தலைவர்கள் இதை கடுமையாக விமர்சித்தனர். ஆனால், தனது தாயாருக்கு சாதாரணமாக சொன்னதை ஊடகங்கள் ட்விஸ்ட் செய்துவிட்டதாக பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். தனது தாயாருக்கு 78 வயதாகிறது, அவரும், முர்முவும் மரியாதைக்குரிய நபர்கள் தான் எனவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News March 1, 2026

அஜித் பவார் மரணம்.. திடுக்கிடும் தகவல்

image

<<18987395>>அஜித் பவார்<<>> மரணத்திற்கு விமானியின் அலட்சியமே காரணம் என புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. விமானம் தரையிறங்க குறைந்தபட்சம் 5,000 மீட்டர் பார்வைத்திறன் அவசியம்; ஆனால் 3,000 மீட்டர் மட்டுமே தெரிந்தபோதும் விமானத்தை தரையிறக்க முயன்றதே விபத்துக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானி ‘அய்யோ.. அய்யோ..’ என அலறிய சத்தம் கருப்புப் பெட்டியில் பதிவாகி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 1, 2026

இன்னும் 1000 இடங்களில் தாக்குதல் நடக்கும்: இஸ்ரேல்

image

ஈரானில் வரும் நாள்களில் ஆயிரக்கணக்கான இலக்குகளை தாக்குவோம் என இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். ஈரானின் துணிச்சலான மக்கள் கொடுங்கோல் ஆட்சியின் பிடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கான சூழலை இஸ்ரேல் உருவாக்கும் என கூறியுள்ளார். ஈரான் குடிமக்களே, இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்; இது ஒரு தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு எனவும் கூறியுள்ளார்.

News March 1, 2026

சமூகநீதிக்கும் ஸ்டாலினுக்கு சம்பந்தம் இல்லை: அன்புமணி

image

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரத்தை கொடுத்தவர் PM மோடி என அன்புமணி தெரிவித்துள்ளார். NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாஜக ஆளும் பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதற்கேற்ப நலத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், சமூகநீதிக்கும் ஸ்டாலினுக்கு சம்பந்தம் இல்லை என்றும், சமூகநீதி என்றாலே PM மோடிதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!