News August 25, 2024
தனுஷ் படத்தில் Cameoவாக பிரியங்கா மோகன்

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் நடிகை பிரியங்கா மோகன் Cameo செய்துள்ளார். தனுஷ் இயக்கும் இப்படத்தின் முதல் பாடலான “Golden Sparrow…” விரைவில் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதன் புது போஸ்டரை வெளியிட்டுள்ள தனுஷ், Cameoவாக நடித்ததற்காக பிரியங்கா மோகனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்திற்கு GVP இசையமைத்துள்ளார்.
Similar News
News November 24, 2025
குமரி: மாணவிக்கு நேர்ந்த கொடுமை., இருவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மாணவியை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அஜித் (21) சஜின் (25) ஆகிய இரண்டு இளைஞர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மாணவி மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் தற்கொலைக்கு முயன்றதால் இச்சம்பவம் வெளியே தெரியவந்தது என விசாரணையில் வெளிவந்துள்ளது. இதில் தொடர்புடைய இரண்டு பேரும் தஞ்சாவூரில் பதுங்கி இருந்தபோது போலீசார் அவர்களை கைது செய்தனர்.
News November 24, 2025
இந்து கல்லூரியில் முஸ்லிம் மாணவர்கள்.. பாஜக எதிர்ப்பு

ஜம்மு & காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 42 முஸ்லிம், 8 இந்து மாணவர்கள் சேர்க்கப்பட்டிருப்பது, அரசியல் ரீதியான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, VHP, பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் துணைநிலை ஆளுநரிடம் மனு அளித்துள்ளன. ஆனால், நீட் தகுதி தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
News November 24, 2025
BREAKING: தங்கம் விலை குறைந்தது

தங்கம் விலை இன்று(நவ.24) சவரனுக்கு ₹880 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,520-க்கும், சவரன் ₹92,160-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) 30 டாலர்கள் குறைந்து 4,053 டாலர்களுக்கு விற்பனையாகிறது. அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.


