News April 25, 2024
மறுபகிர்வு பற்றி பிரியங்கா விளக்கமளிக்க வேண்டும்

காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டுள்ள ‘சொத்து மறுபகிர்வு’ பற்றி மக்களுக்கு பிரியங்கா காந்தி விளக்கமளிக்க வேண்டுமென மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியினர் செல்வத்தை உருவாக்குவதைப் பற்றி சிந்திக்கவில்லை. அவர்கள் சிலரது செல்வத்தைக் கட்டாயப்படுத்தி பறித்து, அதனை மற்றவர்களுக்கு பகிர்வதைப் பற்றியே சிந்திக்கின்றனர் எனக் கூறினார்.
Similar News
News November 13, 2025
TET தேர்வுக்கான ஹால்டிக்கெட் எடுப்பதில் சிக்கல்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள்-1 தேர்வு வரும் 15-ம் தேதியும், தாள்-2 தேர்வு 16-ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாக தேர்வர்கள் குற்றம்சாட்டுகின்றனர். முக்கியமாக ஹால்டிக்கெட்டின் பாஸ்வேர்டை மறந்தவர்கள், OTP எண் மூலம் அதை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என புகார் அளித்துள்ளனர்.
News November 13, 2025
அதிமுகவில் இருந்து நீக்கினார்

கிருஷ்ணகிரி அதிமுக முக்கிய நிர்வாகியும், கவுன்சிலருமான நாகஜோதியை கட்சியிலிருந்து நீக்கி EPS அறிவித்துள்ளார். கிருஷ்ணகிரி நகராட்சி சேர்மன் பரிதா நவாப்புக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவருக்கு ஆதரவாக நாகஜோதி வாக்களித்தார். திமுகவை சேர்ந்த பரிதா நவாப்பின் பதவியை சொந்த கட்சியினரே பறித்தனர். வரும் தேர்தலில் கிருஷ்ணகிரியில் கட்டாயம் வெற்றி பெற திமுகவினருக்கு CM ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
News November 13, 2025
சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை

இன்று (நவ.13) வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை இறக்கத்துடனே காணப்படுகிறது. சென்செக்ஸ் 100 புள்ளிகள் குறைந்து 84,366 புள்ளிகளிலும், நிஃப்டி 32 புள்ளிகள் குறைந்து 25,843 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. Ashok Leyland, P&G, Vedanta ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் உள்ள நிலையில், ONGC, Orient உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.


