News August 12, 2025
பிரியங்கா காந்தியை காணவில்லை.. பரபரப்பு புகார்

வயநாடு காவல்துறையில் MP பிரியங்கா காந்தியை காணவில்லை என பாஜக நிர்வாகி முகுந்தன் பல்லியரா மனு அளித்துள்ளார். பிரியங்கா காந்தியை 3 மாதங்களாக காணவில்லை எனவும், சூரல்மலையில் ஏற்பட்ட பாதிப்பின் போது மக்களோடு இருக்கவில்லை எனவும் புகாரளித்துள்ளார். முன்னதாக, மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி கடந்த 2 மாதங்களாக தொகுதியில் காணவில்லை என திருச்சூர் போலீஸிடம் மாணவர் காங்கிரஸ் புகாரளித்திருந்தது.
Similar News
News August 12, 2025
‘தாயுமானவர் திட்டம்’ தேமுதிகவுக்கு கிடைத்த வெற்றி

TN அரசின் ‘<<17336334>>தாயுமானவர் திட்டம்<<>>’ தேமுதிக மற்றும் விஜயகாந்திற்கு கிடைத்த வெற்றி என பிரேமலதா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 2006 தேர்தலின்போது வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என தேமுதிக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அந்த திட்டத்தையே தற்போது TN அரசு முதற்கட்டமாக நிறைவேற்றியுள்ளதாக கூறிய பிரேமலதா, அன்று ஏளனமாக சிரித்தவர்கள் இன்று எங்கே போனார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
News August 12, 2025
தண்ணீரை அதிகம் செலவழிக்கும் AI?

உலகிலேயே அதிக நீரை உறிஞ்சுவது இந்த டேட்டா செண்டர்கள் தான். AI-ஐ ட்ரெயின் செய்வதற்கும், பதில்களை கொடுக்கவைப்பதற்கும், தரவுகளை சேமிப்பதற்கும் டேட்டா செண்டர்கள் இன்றியமையாதது. உதாரணத்திற்கு, 100 மெகாவாட் கொண்ட டேட்டா செண்டர் ஒரு நாளுக்கு 2 மில்லியன் லிட்டர் தண்ணீரை செலவழிக்கிறதாம். எனவே AI-யிடம் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு 10 மி.லி. தண்ணீர் செலவாகிறதாம். பார்த்து கேள்வி கேளுங்க மக்களே..
News August 12, 2025
யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குழு

நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்படுவதாக லோக்சபா தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். 146 MP-க்கள் கையெழுட்திட்டு வழங்கிய தீர்மானத்தின் அடிப்படையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுமாம். தீ விபத்தின் போது வர்மா வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரம் சர்ச்சையானது.