News November 23, 2024

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி முன்னிலை

image

கேரளாவின் வயநாடு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 460 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்யன் மோக்ரியும் பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாசும் பின் தங்கியுள்ளனர். ஏற்கெனவே ராகுல் காந்தி வசம் இருந்த தொகுதி என்பதால் பிரியங்காவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தெரிகிறது.

Similar News

News December 10, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶டிசம்பர் 10, கார்த்திகை 24 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10.45 AM – 11:45 AM & 6:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சஷ்டி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

News December 10, 2025

ஜான் சீனா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் & பேட் நியூஸ்!

image

WWE-ல் அதிக ரசிகர்களை கொண்ட ஜான் சீனா, அதில் இருந்து ஓய்வு பெற இன்னும் 4 நாள்களே உள்ளன. வரும் 13-ம் தேதி பாஸ்டனில் நடைபெறும் போட்டியே அவரது கடைசி போட்டியாகும். இதனால், சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு அவர் ஒரு நல்ல செய்தியையும் கூறியுள்ளார். அதாவது, அடுத்த 5 ஆண்டுகளுக்கு WWE தூதுவராக செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளார். இருப்பினும், அவரை Ring-ல் பார்க்க முடியாதே என்ற ஏக்கம் ரசிகர்களிடையே உள்ளது.

News December 10, 2025

மத்திய அரசு எடுக்கும் முடிவு.. உங்கள் வங்கி கணக்கு மாறலாம்

image

நாடு முழுவதும் உள்ள 6 சிறிய பொதுத்துறை வங்கிகளை, பெரிய பொதுத்துறை வங்கிகளுடன் ஒன்றிணைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதனால், சிறிய வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் கணக்கு எண், IFSC கோடு, வங்கி கணக்கு புத்தகம், ATM கார்டு உள்ளிட்ட வங்கி விவரங்கள் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒன்றிணைப்பு 2026-27 நிதியாண்டில் தொடங்கும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!