News June 17, 2024
வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி

கேரளா வயநாடு தொகுதி இடைத்தேர்தலில், பிரியங்கா போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. ஏற்கெனவே அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல், தனது MP பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் போது, காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரேபரேலி தொகுதி MP-யாக ராகுல் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 13, 2025
மக்கள் மீது சுமையை மட்டுமே திமுக ஏற்றியுள்ளது: EPS

திமுக ஆட்சிக்கு வந்ததும் குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என அனைத்தையும் உயர்த்தி, மக்களின் சுமையை அதிகரித்துவிட்டதாக EPS குற்றம்சாட்டினார். அதிமுகவின் திட்டங்களை நிறுத்திய ஸ்டாலினுக்கு மக்கள் மீது அக்கறையில்லை என்றும், குடும்பத்தின் நலன்களை மட்டும் அவர் சிந்திப்பார் எனவும் EPS விமர்சித்தார். தேர்தல் அறிக்கையில் சொல்லிய பலவற்றை நிறைவேற்றாமல், இப்போது வெற்று நாடகத்தை திமுக போடுவதாகவும் சாடினார்.
News September 13, 2025
கல்லீரலை காக்க… இதை கவனியுங்க

உடலில் 500-க்கு மேற்பட்ட வேலைகளை செய்யும் கல்லீரல் தான், உடலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றுகிறது. அப்படிப்பட்ட கல்லீரலை பராமரிக்க இவற்றை பின்பற்றவும்: *குளிர்பானம், சோடா, சர்க்கரையை தவிருங்கள் *உடல்பருமனை கட்டுப்பாட்டில் வையுங்கள் *வலிநிவாரணி மாத்திரைகள் கூடவே கூடாது *ஃபாஸ்ட்புட் உணவை தவிர்க்கவும் *மது, புகை வேண்டவே வேண்டாம் *கல்லீரல் அழற்சியை தவிர்க்கவும் *11 pm to 4 am கட்டாயமாக தூங்கவும்.
News September 13, 2025
கூட்டணியில் இருந்தாலும் சமரசம் செய்யாத CPI(M)

கூட்டணியில் இருந்தாலும், மக்கள் பிரச்னையில் திமுக அரசுக்கு எதிராக சண்முகம் குரல் எழுப்புகிறார். இந்நிலையில், திண்டிவனத்தில் பட்டியல் சமூக ஊழியரை காலில் விழ வைத்த குற்றவாளிகளை ஏன் இதுவரை கைது செய்யவில்லை என்று அவர் கொந்தளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் திமுகவை சார்ந்தவர்கள் என்பதால் போலீஸ் தயக்கம் காட்டுகிறதா என கேள்வி எழுப்பிய அவர், இந்த அணுகுமுறை அரசுக்கு பெருமை சேர்க்காது என்றார்.