News November 30, 2024

பாஜக அஞ்சுவதாக பிரியங்கா தாக்கு

image

மக்கள் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய பாஜக அரசு அஞ்சுவதாக பிரியங்கா M.P. விமர்சித்துள்ளார். கேரள மாநிலம், மலப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புக்கு பாஜக மரியாதை கொடுப்பதில்லை என்றும், அதனாலேயே பாஜகவை காங்கிரஸ் எதிர்க்கிறது என்றும் கூறினார். மக்கள் பிரச்னை குறித்து விவாதிக்க பாஜக அஞ்சுவதாலேயே நாடாளுமன்றம் முடங்கி வருவதாகவும் சாடினார்.

Similar News

News April 28, 2025

ஆணவக் கொலை: ஆயுள் தண்டனை உறுதி

image

22 ஆண்டுகளுக்கு முன் கடலூரில் நடந்த முருகேசன் – கண்ணகி ஆணவக் கொலை வழக்கு தமிழகத்தையே உலுக்கியது. முருகேசனுடனான காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணகியின் குடும்பத்தார் இருவருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்தனர். இதில் குற்றவாளிகளுக்கு ஐகோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து 3 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை SC தள்ளுபடி செய்து ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

News April 28, 2025

அமைச்சர் ஐ.பெரியசாமி விடுதலை ரத்து

image

அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 2026 -2010 வரை வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.2.1 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஐ.பி.,யை திண்டுக்கல் நீதிமன்றம் விடுத்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், அவரின் விடுதலையை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. இது அவருக்கு பெரும் சிக்கலாக மாறியுள்ளது.

News April 28, 2025

விஜய் சங்கரின் மாஸ் ரெக்கார்டை உடைத்த கோலி!

image

நடப்பு ஆண்டில் விஜய் சங்கரின் ஒரே சாதனை DC-க்கு எதிராக 43 பந்துகளில் அரைசதம் அடித்தது தான். இதுதான் IPL 2025-ல் மிகவும் மெதுவான அரைசதமாக இருந்தது. மோசமான ரெக்கார்ட் என்றாலும், அவரால் இந்த சீசனில் ஒரே ஆறுதல் ரசிகர்களுக்கு இதுமட்டுமே. ஆனாலும், அதுவும் இருக்கக்கூடாது என கோலி முடிச்சி விட்டார். DC-க்கு எதிரான மேட்சில் அவர் 45 பந்துகளில் அரைசதம் அடித்து விஜய் சங்கரின் ரெக்கார்டை உடைத்து விட்டார்.

error: Content is protected !!