News March 19, 2024
கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய பிரியாமணி

கேரளாவின் கொச்சியில் அமைந்துள்ள திருக்கயில் மகாதேவன் கோவிலுக்கு விலங்குகள் நல வாரியமான பீட்டா அமைப்பும், நடிகை பிரியாமணியும் இணைந்து இயந்திர யானையை வழங்கியுள்ளனர். இந்த கோவிலில் உயிருள்ள யானையை பயன்படுத்துவதற்குப் பதிலாக இயந்திர யானையை பயன்படுத்த உள்ளதாக கோவில் நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தது. இதை பாராட்டும் விதமாக தற்போது ‘மகாதேவன்’ என்ற இயந்திர யானையை பரிசளித்துள்ளனர்.
Similar News
News April 20, 2025
அமித் ஷாவின் ஹெல்த் டிப்ஸ்.. இதை மட்டும் ஃபாலோ பண்ணா!

உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் அமித் ஷா, சில ஹெல்த் டிப்ஸ்களை வழங்கியுள்ளார். தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி, 6 மணி நேர தூக்கத்தை கடைபிடைத்தால் உடல் ஆரோக்யமாக இருக்கும் எனவும், கடந்த 4 ஆண்டுகளாக இதை ஃபாலோ செய்து உடல் எடை, சர்க்கரை நோயில் இருந்து மீண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வயதிலும் எந்த மாத்திரைகளையும் எடுத்து கொள்வதில்லை எனவும் கூறியுள்ளார்.
News April 20, 2025
விஜய்க்கு போட்டியாக அஜித் படம் ரீ-ரிலீஸ்

பழைய படங்களை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து கல்லா கட்டி வருகின்றனர். ‘கில்லி’, ‘சச்சின்’ போன்ற படங்கள் எதிர்பார்த்ததை விட வசூலை வாரிக்குவித்தன. அந்த வகையில், நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு மே 1-ம் தேதி ‘வீரம்’ படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ‘சச்சின்’ படத்தை போலவே நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு ரிலீசாகிறது. கடந்த 2014-ல் வெளியான இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார்.
News April 20, 2025
மதிமுகவில் பற்றி எரியும் புகைச்சல்

மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறும் நிலையில் மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. தான் வைகோவின் தளபதி என்றும், அதற்கு அடையாளமாக அவரின் முகம் பதித்த மோதிரமும், சட்டைப் பாக்கெட்டில் படமும் இருக்கும் என மல்லை சத்யா குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அவர் மட்டுமல்ல மதிமுகவில் உள்ள அனைவருமே வைகோவின் தளபதிகள் தான் என துரை வைகோ விமர்சித்துள்ளார்.