News April 11, 2025
த்ரிஷாவை ஓரங்கட்டிய பிரியா வாரியர், சிம்ரன்

இன்று காலையில் இருந்து ட்ரெண்டிங் பிரியா வாரியர் தான். தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாட்டிற்கு டான்ஸ் ஆடி ரசிகர்களை vibe ஆக்கிவிட்டார். அதே போல, கேமியோ ரோலில் வரும் சிம்ரனுக்கும், அஜித்துக்குமான கெமிஸ்ட்ரி விசில் சத்தத்தை அள்ளுகிறது. படத்தில் ஹீரோயின் த்ரிஷா தான் என்றாலும், ரசிகர்களை கவர்ந்தது என்னவோ சிம்ரனும், பிரியா வாரியரும் தான். நீங்க படம் பாத்தாச்சா.. மூணு பேரில் யாரு பெஸ்ட்?
Similar News
News October 31, 2025
ஓய்வு பெறுகிறாரா ஆஸி., கேப்டன் அலிசா ஹீலி?

ஆஸி., மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலிசா ஹீலி காயம் காரணமாக, ஓய்வில் இருந்தார். பின்னர், இந்தியாவுக்கு எதிரான செமி ஃபைனலில் விளையாடினார். 5 ரன்களிலேயே பெவிலியன் திரும்பிய அலிசாவுக்கு, ஆஸி.,வின் தோல்வி பேரதிர்ச்சியாக அமைந்துவிட்டது. இந்நிலையில், இதுவே தனது கடைசி ODI உலகக் கோப்பை போட்டி என அவர் தெரிவித்துள்ளார். இது அலிசாவின் ஓய்வுக்கான சமிக்ஞை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
News October 31, 2025
பிஹார் பரப்புரையில் PK கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை

பிஹாரின் மொகமா பகுதியில், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி சார்பில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அப்போது, 2 கான்வாயில் இருந்த கட்சி நிர்வாகிகளிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது கைகலப்பாக மாற, துலார்சந்த் யாதவ் என்ற நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதனால் அந்த இடமே பரபரப்பு களமாக மாற, போலீஸார் பொதுமக்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
News October 31, 2025
ஜனநாயகனுக்கு அடுத்து ரிலீஸ் ஆகிறதா கருப்பு?

சூர்யாவின் ‘கருப்பு’ படம், 2026-ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களின் லிஸ்ட்டில் உள்ளது. இந்நிலையில், இப்படம் ஜன.23 அன்று குடியரசு தின விடுமுறை படமாக ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பொங்கல் ரிலீஸாக களமிறங்கும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு பிறகு வெளியாகலாம். முன்னதாக, 2026, ஏப்ரலில் தமிழ் புத்தாண்டு வெளியீடாக ரிலீஸாகும் என கூறப்பட்டது.


