News August 13, 2024
தனியார் வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

பெருமாள்புரம் சிதம்பர நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 16-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் கல்வி சான்று மற்றும் இதர சான்றிதழ்களுடன் பங்கேற்று பயனடையலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
திருநெல்வேலி: 100 யூனிட் இலவச மின்சாரம் – APPLY…!

திருநெல்வேலி மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கிருக்கு. இங்கு <
News March 5, 2026
நெல்லை: துணை முதல்வர் இன்று வருகை

நெல்லை மாவட்டம், பாளை அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று மாலை 4.30 மணிக்கு மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்கிறார். இதில் அமைச்சர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.
News March 5, 2026
நெல்லை: வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது

நெல்லை டவுன் மாதா பூங்கொடி தெருவை சேர்ந்த மாரியப்பன்(19) என்பவர் புகழேந்தி தெருவில் உள்ள கட்டிடத்தின் மேல் மாடியில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்ஐ பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 220 கிராம் எடை உள்ள கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து டவுண் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியப்பன் என்பவரை கைது செய்தனர்.


