News May 7, 2025

தனியார் மதுபான கடைகளும் இன்று இயங்காது!

image

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள், அதனுடன் தொடர்புடைய பார்களை தொடர்ந்து தனியார் மதுபான கடைகளும், பார்களும் இன்று (மே 1) இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதிகளிலும் மது விற்பனை நடக்காது. இதனை மீறி மதுபானம் விற்பனை செய்யும் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.

Similar News

News September 4, 2025

அரசியலில் இருந்து விலகும் செங்கோட்டையன்?

image

செங்கோட்டையன் நாளை என்ன பேசப்போகிறார் என்பதுதான் அரசியல் களத்தில் விவாதமாக மாறியுள்ளது. 9 முறை MLA, MGR, ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற தலைவர், 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் என செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கை மிக நீண்டது. ஆனாலும், EPS உடனான அதிருப்தி காரணமாக மீண்டும் சசிகலா, டிடிவி, OPS இணைப்பு (அ) அரசியலில் இருந்து விலகல் என இந்த 2 முடிவில் ஏதேனும் ஒன்றையே அவர் எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

News September 4, 2025

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

image

கோவை, நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்தது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 7-ம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

News September 4, 2025

Parenting: குழந்தைகளின் தவறுகளை சரி செய்வது எப்படி?

image

பெற்றோர்கள் குழந்தைகளின் சிறிய தவறுகளை கவனித்திருப்பீர்கள். இந்த தவறுகளை சரி செய்ய வேண்டும் என கண்டித்தால், அதை எப்போதும் அவர்கள் திருத்திக்கொள்ள மாட்டார்கள். மாறாக, இந்த 3 எளிய வழிகளை நீங்கள் செய்து பார்க்கலாம். ➤எந்த மாதிரியான சூழலில் தவறு செய்கிறார்கள் என கவனித்து, அதை பொறுமையாக எடுத்துரையுங்கள். ➤எப்படி சரி செய்யலாம் என சொல்லி கொடுங்கள் ➤தவறை திருத்திக் கொண்டால் பாராட்டுங்கள். SHARE.

error: Content is protected !!