News July 13, 2024
₹44,300 கோடியாக சரிவு கண்ட தனியார் முதலீடு!

2014 முதல் 2024 வரையிலான 10 ஆண்டுகளில் தனியார் முதலீடும் கடும் சரிவை சந்தித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிக முக்கியமானதாக இருக்கும் புதிய தனியார் முதலீடு திட்டங்கள், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் & ஜூன் வரையிலான காலத்தில் ₹44,300 கோடியாக சரிந்தது. இதே காலகட்டத்தில் கடந்தாண்டு தனியார் முதலீடு ₹7.9 லட்சம் கோடியாக இருந்தது.
Similar News
News November 22, 2025
தமிழ் நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்

நடிப்பு பயிற்சியாளர் கோபாலி(92), <<18290175>>இயக்குநரும், நடிகருமான வி.சேகர்<<>>(73), <<18248121>>நடிகர் அபிநய்(48)<<>> என இம்மாதத்தில் அடுத்தடுத்து முக்கிய நபர்களை தமிழ் சினிமா இழந்துவிட்டது. இதில் கோபாலி, ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, நாசர் உள்ளிட்ட பலர் உச்சபட்ச நடிகர்களுக்கு பயிற்சி அளித்தவர். கடந்த 18-ம் தேதி மறைந்த நிலையில், அவரது இல்லத்திற்கு இன்றும் சினிமா பிரபலங்கள் பலர் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்.
News November 22, 2025
தோனிக்கு அடுத்து ரிஷப் பண்ட்; எதுலன்னு பாருங்க..

தோனிக்கு அடுத்தபடியாக இந்திய டெஸ்ட் அணியை கேப்டனாக வழிநடத்தும் 2-வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரிஷப் பண்ட். காயம் காரணமாக சுப்மன் கில் விலகியதால் தெ.ஆ., அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு ரிஷப் பண்டுக்கு கிடைத்துள்ளது. 2008 முதல் 2014 வரை சுமார் 60 டெஸ்ட் போட்டிகளை தோனி வழிநடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 22, 2025
இப்படியும் சில பிள்ளைகள்.. பெற்றோர் ஜாக்கிரதை!

ஆரணி அருகே அம்மாவின் நகைகளைத் திருடி தனது பெண் தோழிகளுக்கு செல்போன் உள்ளிட்ட ஆடம்பர பொருள்கள் வாங்கிக் கொடுத்து ஊர் சுற்றிவந்த +2 மாணவனின் செயலால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். வீட்டிலிருந்து 2.5 சவரன் நகை திருடப்பட்டதாக பெண் அளித்த புகாரை போலீசார் விசாரித்தபோது இது தெரியவந்துள்ளது. இந்நிலையில், பள்ளி செல்லும் பிள்ளைகளையும் பெற்றோர் கொஞ்சம் கண்காணிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


