News April 22, 2025

தனியார் ஹஜ் கட்டணம் பலமடங்கு உயர்வு

image

தனியார் ஹஜ் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளதால், அந்த யாத்திரை செல்வோர் கவலையில் உள்ளனர். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு ஹஜ் யாத்திரைக்கு தனியாருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 42,507 இடங்கள் ரத்தானதால், தனியார் ஹஜ் யாத்திரைக்கான கட்டணம் பல லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. எனவே, இதில் வெளிப்படைதன்மையை ஏற்படுத்த அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News September 11, 2025

கத்தார் மீதான தாக்குதலுக்கு PM மோடி கண்டனம்

image

கத்தார் அரசர் தமீம் பின் ஹமாத்துடன் PM மோடி இன்று தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கத்தார் தலைநகர் தாஹாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்த அவர், இந்த தாக்குதல் ஆழ்ந்த கவலை அளிப்பதாக கூறினார். மேலும், பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்னைகளை தீர்ப்பதற்கு இந்தியா ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்தார். முன்னதாக, ஹமாஸ் உயர்மட்ட தலைவர்களை குறிவைத்து தாஹாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

News September 11, 2025

செங்கோட்டையனை பாஜக இயக்குகிறது: திருமா

image

அமித்ஷாவை சந்தித்ததன் மூலம் செங்கோட்டையனின் பின்னால் பாஜக இருப்பது உறுதியாகியுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். தனியே போகவிடாமல், கூட்டணிக்குள்ளும் தனித்து செயல்படவிடாமல் அதிமுகவை கபளிகரம் செய்யும் முயற்சியில் பாஜக ஈடுபடுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், EPS நீக்கிய ஒருவரை அமித்ஷா, நிர்மலா சீதாராமன் எந்த துணிச்சலில் சந்திக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News September 11, 2025

மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா

image

இந்திய அணி மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து டாஸில் தோல்வியடைந்து வந்தது. கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக டாஸை தோற்ற இந்திய அணி, அதன்பின் தொடர்ச்சியாக 15 முறை டாஸை ஜெயிக்கவே இல்லை. இந்த மோசமான சாதனைக்கு UAE-க்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

error: Content is protected !!