News November 19, 2024
கஸ்தூரிக்கு கொடுக்கப்பட்ட கைதி எண்

தெலுங்கு மக்களை இழிவாக பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண் 644798 வழங்கப்பட்டது. இந்நிலையில், சிறையில் முதல் நாளான நேற்று முன்தினம் இரவு அவர் தூக்கமின்றி இருந்ததாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மதியம் அனைத்து சிறைக் கைதிகளுக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. அதை கஸ்தூரி எடுக்கவில்லை. இரவில் கலவை சாதத்தையும் அளவாகவே அவர் சாப்பிட்டுள்ளார்.
Similar News
News March 14, 2026
விஜய்யின் ஒப்புதல் இன்றி இது நடைபெறாது: துரை வைகோ

எடுத்த முடிவில் உறுதியாக இருந்தால்தான், மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படும் என விஜய்க்கு துரை வைகோ அறிவுறுத்தியுள்ளார். திமுக, பாஜகவை எதிரி எதிர்த்துதான் அரசியலுக்கு வந்ததாக விஜய் கூறினார்; ஆனால் திடீரென தவெக மா.செ கூட்டத்தைக் கூட்டி, அவர்கள் கூட்டணி விரும்புவதாக கூறுவது தலைமையின் ஒப்புதல் இல்லாமல் நடைபெறாது என்பதையே காட்டுகிறது என்றும், விஜய்யின் முடிவு காலப்போக்கில் தெரியவரும் எனவும் கூறியுள்ளார்.
News March 14, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 632 ▶குறள்: வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. ▶பொருள்: அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.
News March 14, 2026
உச்சநீதிமன்ற நிர்வாகத்தை இனி AI கவனிக்கும்!

கடந்த 2022-ல் Ex SC CJI சந்திரசூட் அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு வழக்கு, தற்போது ஒரு புதிய அமர்வின் முன் மீண்டும் பட்டியலிடப்பட்டது சர்ச்சையானது. இதுகுறித்த விசாரணையில் SC-ன் பதிவகத்தில் உள்ள குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. இதையடுத்து வழக்கு ஒதுக்கீடு & அமர்வுகளைத் தீர்மானிக்கும் பணிகளில் மனிதக் குறுக்கீட்டை நீக்கிவிட்டு, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த CJI சூர்யா காந்த் முடிவெடுத்துள்ளார்.


