News March 3, 2025
மாணவர்களுக்கு முதல்வர் சொல்லும் அறிவுரை

நாளை +1, +2 பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. இதையொட்டி மாணவர்களுக்கு வாழ்த்து சொல்லியுள்ள முதல்வர் ஸ்டாலின், இப்பொதுத்தேர்வுகள் உங்களது உயர்க்கல்விக்கும். வாழ்க்கைக்கும் மிக முக்கியமான அடித்தளமாகும். நீங்கள் தேர்வினை மன அமைதியுடன், தன்னம்பிக்கையுடன் எழுத வேண்டும் என்றார். மேலும், நீங்கள் இதுவரை செய்த முயற்சிகள், உங்கள் தேர்வில் நல்ல முடிவுகளைத் தரும். என்றும் வாழ்த்தியுள்ளார்.
Similar News
News March 12, 2026
இந்திய கப்பல்களுக்கு அனுமதியா? ஈரான் மறுப்பு

ஹார்முஸ் வழியாக புறப்பட்ட முதல் <<19360931>>எண்ணெய் கப்பல்<<>>(SHENLONG) மும்பையை அடைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இனி பிரச்னை படிப்படியாகும் குறையும் என பெருமூச்சு விடுவதற்குள் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது ஈரான். அதாவது, ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய சரக்கு கப்பல்கள் செல்ல எந்த அனுமதியும் வழங்கவில்லை என ஈரான் மறுத்ததாக ஊடங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
News March 12, 2026
அக்சரிடம் மன்னிப்பு கேட்டேன்: சூர்யகுமார்

T20 WC சூப்பர் 8 சுற்றில் SA-க்கு எதிரான போட்டியில் அக்சர் படேலை அணியில் சேர்க்காததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டதாக சூர்யகுமார் தெரிவித்தார். அதற்காக அக்சர் தன்னிடம் கோபத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறினார். நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக அக்சர் விளையாடாத நிலையில், SA-க்கு எதிரான போட்டியில் அவருக்கு பதிலாக வாஷிங்டன் விளையாடினார். அதில் இந்தியா தோல்வி அடைந்தது.
News March 12, 2026
மோடி ஆட்சியில் 1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை:ரகுபதி

விவசாயிகளுக்கு எதிராக திமுக செயல்படுவதாக PM மோடி வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். 3 வேளாண் சட்டங்கள் உள்பட விவசாயிகளுக்கு எதிராக அனைத்தையும் செய்துவிட்டு அவர்களை பற்றி பேச மோடிக்கு எந்த உரிமையும் இல்லை என அவர் சாடியுள்ளார். மோடி ஆட்சியில் 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், தேர்தல் வந்தாலே TN மீது PM-க்கு பாசம் வந்துவிடும் எனவும் விமர்சித்துள்ளார்.


