News March 18, 2024
குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் பிரதமர் பேரணி

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இன்று கோவையில் வாகனப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கிறார். இதற்காக கர்நாடக மாநிலத்திலிருந்து இன்று மாலை 5.30 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து சுமார் 2.5 கி.மீ. தொலைவுக்கு 5.45 முதல் 6.45 மணி வரை காரில் சென்றபடி மக்களை சந்திக்கிறார். தொடர்ந்து, 1998ல் குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகே பேரணியை நிறைவு செய்கிறார்.
Similar News
News November 23, 2025
ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மரியாதை

பன்முக வித்தகர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவரது தமிழ் தொண்டினை கௌரவிக்கும் விதமாக போலீஸ் மரியாதை அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள மின் இடுகாட்டில் இன்று (நவ.23) அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
News November 23, 2025
சர்வதேச விழாவில் ராணுவத்தை பெருமைப்படுத்திய SRK

மும்பையில் நடந்த சர்வதேச அமைதி விருதுகள் விழாவில், மும்பை (26/11), பஹல்காம், டெல்லி தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு ஷாருக்கான் அஞ்சலி செலுத்தினார். பின்பு, பாதுகாப்பு படையினரை குறிப்பிட்டு, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என யாராவது கேட்டால், நாட்டை பாதுகாக்கிறேன் என்று சொல்லுங்கள்; என்ன சம்பாதிக்கிறீர்கள் என்று கேட்டால், 140 கோடி மக்களின் ஆசிர்வாதங்களை சம்பாதிக்கிறேன் என்று சொல்லுங்கள் என்றார்.
News November 23, 2025
மீனவர்கள் உடனே கரை திரும்ப அறிவுறுத்தல்

வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதால், நாளைக்குள் மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என்று IMD எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இது வரும் 26-ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதால், அந்தமான் கடல்பகுதிகளுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.


