News January 7, 2025
8 ஆண்டுகளுக்கு பின் இலங்கை செல்லும் பிரதமர்

பிரதமர் மோடி விரைவில் இலங்கை செல்ல உள்ளதாக இந்திய தூதரக அதிகாரி சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். பயணத்திற்கான தேதி குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கை அதிபர் விரைவில் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதால், தேதி அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடைசியாக கடந்த 2017ல் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 20, 2026
மக்கள் நாயகன் காலமானார்

இயற்கை ஆர்வலர் ராதேஷ்யாம் கோயங்கா(84) உடல்நலக்குறைவால் காலமானார். அசாமை சேர்ந்த இவருக்கு மரங்களின் நண்பன் என்ற பெயரும் உண்டு. திப்ருகர், ஜோதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு அவற்றை பராமரித்து பசுமை புரட்சி செய்தார். தொழில் பொறுப்புகளை மகனிடம் ஒப்படைத்துவிட்டு,’கிரீன் திப்ருகர்’ உருவாக்கத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தார். இவரது மறைவால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
News January 20, 2026
அதிமுக வெளிநடப்பு செய்தது

TN சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். தமிழகத்தில் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி வழங்காததாக கூறி அதிமுக MLA-க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து வெளியேறிய அவர்கள், மாநில அரசே ராஜினாமா செய் எனவும் சட்டம்-ஒழுங்கு எங்கே போச்சு எனவும் கோஷமிட்டனர். இதற்கு முன்னதாக கவர்னர் வெளிநடப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 20, 2026
திமுக கூட்டணியில் அடுத்த கட்சி.. முடிவு இறுதியாகிறது

தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் நிர்வாக குழு கூட்டம் நடந்ததாக தகவல் கசிந்துள்ளது. இதில் கூட்டணியை பற்றி அனைவரும் டிஸ்கஸ் செய்த நிலையில், இறுதியாக அன்புமணி இருக்கும் அணிக்கு போவதாக இல்லை என ராமதாஸ் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், NDA கூட்டணியை தவிர்த்து ராமதாஸ் தரப்பு திமுக அல்லது தவெக கூட்டணியை தேர்வு செய்யலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


