News April 11, 2025
சொந்த தொகுதிக்கு செல்லும் பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்கிறார். அங்கு ₹3,880 கோடி மதிப்பீட்டிலான 44 நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார். வாரணாசிக்கு வரும் பிரதமரை வரவேற்க பாஜகவினர் தீவிர ஏற்பாடுகளை செய்துள்ளனர். 4,000க்கும் மேற்பட்ட காவலர்கள், துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News September 17, 2025
புதிய பகைவரையும் வெல்வோம்: கனிமொழி

அப்பா கருணாநிதி பெற்ற பெரியார் விருதை தான் பெற வேண்டும் என்ற கனவை நனவாக்கியுள்ளார் அண்ணன் ஸ்டாலின் என்று கனிமொழி நெகிழ்ச்சிபட கூறியுள்ளார். திமுக முப்பெரும் விழாவில் பேசிய அவர், நம் பரம்பரை பகைவரோ, பாரம்பரிய பகைவரோ, புதிய பகைவரோ என விஜய்யையும் மறைமுகமாக குறிப்பிட்டு, அத்தனை பேரையும் வென்று காட்டுவோம் என்றும் சூளுரைத்துள்ளார்.
News September 17, 2025
சோம்பலை முறிக்கும் உணவுகள்

சோம்பல் என்பது உடல் ஆற்றல் இல்லாமல் மந்தமான நிலைக்கு செல்வது ஆகும். சோம்பல் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருந்தாலும், சத்தான சில உணவுகள், உடல் மற்றும் மூளைக்கு புத்துணர்வு ஊட்டி, சுறுசுறுப்பாக செயல்பட உதவும். அது என்ன உணவுகள் என்பது மேலே போட்டோக்களில் இருக்கு. அதை ஒவ்வொன்றாக பாருங்க. உடலை சுறுசுறுப்பாக்கும் உணவுகள் வேறு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.
News September 17, 2025
இபிஎஸ் சரணடைந்து விட்டார்: ஸ்டாலின்

திமுக முப்பெரும் விழாவில், EPS-ஐ CM ஸ்டாலின் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். அண்ணாயிசமாக இருந்த அதிமுகவின் கொள்கை, அடிமையிசமாக மாறி, அமித்ஷாவே சரணம் என EPS சரணடைந்து விட்டார் என விமர்சித்துள்ளார். மேலும், முழுதாக நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்பார்கள் என்ற அவர், காலிலேயே விழுந்த பிறகு கர்சீப் எதற்கு என்றுதான் இப்போது பலர் கேட்பதாக, அமித்ஷா – EPS சந்திப்பை சாடியுள்ளார்.