News December 18, 2024
குவைத் செல்லும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி, வரும் 21, 22ஆம் தேதிகளில் அரசுமுறை பயணமாக குவைத் செல்ல உள்ளார். அங்கு மன்னர் ஷேக் மெஷல் அல் அஹமது அல் ஜபர், பட்டத்து இளவரசர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் அந்நாட்டிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். கடைசியாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1981ஆம் ஆண்டு அந்நாட்டிற்கு சென்றார்.
Similar News
News September 6, 2025
இந்திய ஏ அணி அறிவிப்பு.. கேப்டனான ஸ்ரேயஸ்!

ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான, 2 Multi-Day போட்டிகளுக்கான இந்திய A அணி அறிவிக்கப்பட்டுள்ளது. SQUAD: ஸ்ரேயஸ் (C), அபிமன்யு ஈஸ்வரன், ஜெகதீசன் (WK), சாய் சுதர்சன், ஜுரெல் (VC & WK), படிக்கல், நிதிஷ்குமார், தனுஷ் கோட்டியன், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், கலீல் அகமது, மானவ் சுதர், யாஷ் தாகூர். ராகுல், சிராஜ் 2-ஆவது போட்டியில் இணைவர். வரும் 16, 23-ம் தேதிகளில் லக்னோவில் போட்டிகள் நடைபெற உள்ளன.
News September 6, 2025
விஜய் பேச அனுமதி மறுப்பு?

செப்.13-ம் தேதி திருச்சியில் தேர்தல் பரப்புரையை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளார். முதல்கட்டமாக திருச்சி, அரியலூர், குன்னம், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பரப்புரை செய்ய உள்ளார். இதற்காக போலீஸ் அனுமதி கோரிய நிலையில், விஜய் பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடக்கவுரைக்காக திருச்சியில் தவெக தரப்பில் கேட்கப்பட்ட இடங்களில் போலீஸ் அனுமதி கிடைக்கவில்லையாம்.
News September 6, 2025
அன்றாடம் சாப்பிடும் ஆரோக்கியமற்ற உணவுகள்

‘உணவின்றி உயிரில்லை’ என்பது உண்மை தான். ஆனால், இன்றைய காலத்தில் நாம் அன்றாடம் உண்ணும் உணவே பல சமயங்களில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்தாகி விடுகிறது. பல உணவுகளில் இருக்கும் ஆபத்தை அறியாமலேயே, அவற்றை நாம் உட்கொள்கிறோம். இந்த உணவுகளை தற்போது உடல் ஏற்றுக்கொண்டாலும், எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அவை என்னென்ன என்று மேல் உள்ள போட்டோக்களில் காணலாம். SHARE IT