News April 15, 2024
கேரளாவில் பிரதமர் மோடி, ராகுல் பரப்புரை

கேரளாவின் திருச்சூரில் பிரதமர் மோடியும், வயநாட்டில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் ஒரே நேரத்தில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். திருச்சூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மோடி ஆதரவு திரட்டுகிறார். வயநாடு தொகுதியில் ராகுல் ரோடு ஷோ சென்று வாக்கு சேகரிக்கிறார். தமிழகத்தில் இன்று காலை ராகுல் பரப்புரையை முடித்து சென்ற நிலையில், மோடி கேரளாவில் பிரசாரத்தை முடித்துவிட்டு மாலையில் தமிழகம் வருகிறார்.
Similar News
News January 3, 2026
IND vs SA போட்டி தற்காலிக நிறுத்தம்

IND vs SA இடையிலான முதல் U19 ODI போட்டி மின்னல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 47.2 ஓவர்கள் வீசப்பட்டுள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 268 ரன்களை அடித்துள்ளது. அதிகபட்சமாக ஹர்வன்ஷ் பங்காலியா 93 ரன்களையும், RS அம்ரிஷ் 65 ரன்களையும் விளாசினர். தென்னாப்பிரிக்க பவுலர் ஜேஜே பேசன் அதிகபட்சமாக 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
News January 3, 2026
இன்று மாலை 6 மணிக்கு.. மிஸ் பண்ணிடாதீங்க

இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூனை பார்க்க நீங்கள் தயாரா? இன்று மாலை 5.45 – 6 மணி வரை வானில் ‘Wolf Supermoon’ தென்பட உள்ளது. இது வழக்கத்தை விட 15% பெரியதாகவும் 30% பிரகாசமாகவும் இருக்கும். இந்த நிலவு ஆரஞ்சு நிறத்தில் தெரியும் என வானியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். மேலும், இன்று இதை பார்க்க தவறினால், நீங்கள் நவம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும்.
News January 3, 2026
வீரச்சுடர் வேலுநாச்சியாருக்கு மரியாதை

வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், CM ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் EPS, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் வேலுநாச்சியாருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். மிரட்டினால் அடங்கிவிடுவோம் என எண்ணியோர்க்கு ‘தமிழ்நாடு போராடும்’ என அன்றே காட்டிய வீரச்சுடரே வேலுநாச்சியார் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


