News March 17, 2025

பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

image

முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரதான் மறைவுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த தேவேந்திர பிரதான், தற்போதைய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை ஆவார். இவருக்கு X பக்கத்திலும் இரங்கல் தெரிவித்திருக்கும் மோடி, ஒடிஷாவில் பாஜகவை வளர்த்ததில் தேவேந்திர பிரதானுக்கு முக்கிய பங்கு உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News September 23, 2025

Corona செய்தி வெளியிட்டவருக்கு மீண்டும் சிறை

image

கொரோனா தொடர்பான செய்திகளை பகிர்ந்ததால் சீன பத்திரிகையாளர் ஜாங் ஜான் 2020-ல் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 2024 மே மாதத்தில் விடுவிக்கப்பட்ட இவரை, சீனாவின் மதிப்பை குலைத்ததாக கூறி மீண்டும் 2024 ஆகஸ்டில் கைது செய்தது அந்நாட்டு அரசு. இந்நிலையில், மீண்டும் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகிறன.

News September 23, 2025

Landing Gear-ல் ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவன்!

image

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் ஆப்கன் சிறுவன்(13) மறைந்திருந்தது அதிகாரிகளை அதிர வைத்துள்ளது. விமானத்தின் Landing Gear பகுதியில் மறைந்திருந்த சிறுவன், ஏர்போர்ட்டின் தடைசெய்யப்பட்ட பகுதியில் சுற்றித் திரிந்ததை அடுத்து, பிடிபட்டுள்ளான். ஆர்வ மிகுதியால் இவ்வாறு செய்துவிட்டதாக சிறுவன் கூற, தீவிர விசாரணைக்கு பிறகு, சிறுவன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளான்.

News September 23, 2025

நரம்பு மண்டலத்திற்கு வலுசேர்க்கும் மூலிகை தேநீர்!

image

வாய்ப்புண், வயிற்றுப் புண்களை ஆற்றவும், நரம்பு மண்டலத்தை மேம்படுத்த வல்லாரை கீரை தேநீர் உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் ➱வல்லாரை கீரை இலைகளை கழுவி, தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும் ➱மிதமான தீயில், 2- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து, வடிகட்டி எடுக்கவும். ➱தேவையென்றால், தேன் சேர்த்தால், சுவையான ஹெல்தியான வல்லாரை கீரை தேநீர் ரெடி. இப்பதிவை அதிகளவில் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!