News March 16, 2024
பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார்

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி கூசாமல் புளுகி வருவதாக முதல்வர் ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார். குமரியில் கூட்டத்தில் பிரதமர் மோடி, திமுகவை கடுமையாக விமர்சித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய முதல்வர், “திமுக அரசின் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க கடந்த பாஜக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News November 8, 2025
Cinema Roundup :‘ஜனநாயகன்’ பட போஸ்டர் காப்பியா?

*‘நாயகன்’ பட ரீ-ரிலீஸுக்கு தடைவிதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு. *அனுஷ்கா பிறந்தநாளில் அவர் நடிக்கும் ‘கத்தனார்: தி வைல்ட் சோர்சரர்’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. *‘ஜனநாயகன்’ படத்தின் சமீபத்திய போஸ்டர், ‘பேட்மேன் vs சூப்பர்மேன் – டான் ஆஃப் ஜஸ்டிஸ்’ பட போஸ்டரின் காப்பி என சர்ச்சை. *இந்திய சினிமாவில் பார்த்திராத வகையில் ‘டாக்ஸிக்’ படம் வித்தியாசமாக இருக்கும் என ருக்மணி வசந்த் கூறியுள்ளார்.
News November 8, 2025
ரெய்னா, தவானுக்கு சமூக பொறுப்பு உள்ளதா?

சூதாட்ட செயலிகள் விளம்பரத்தில் நடித்ததற்காக <<18217110>>ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா<<>> சொத்துகளை நேற்று ED முடக்கியது. இதை குறிப்பிட்டு, இந்த பிரபலங்களுக்கு சமூக பொறுப்பு என்பது உண்மையில் இருக்கிறதா என ஹைதராபாத் கமிஷனர் V.C.சஜ்ஜனார் கேள்வி எழுப்பியுள்ளார். சூதாட்ட செயலிகளை புரொமோட் செய்து, பலர் தற்கொலை செய்து கொள்ள இந்த பிரபலங்களே காரணமாக உள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.
News November 8, 2025
ரஷ்ய ராணுவத்தில் 44 இந்தியர்கள்

ரஷ்ய ராணுவத்தில் 44 இந்தியர்கள் பணியாற்றி வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளது. ரஷ்யாவில் அதிக சம்பளத்தில் வேலை என அழைத்து செல்லப்படும் இந்தியர்கள், அங்கு ராணுவ உதவியாளர்களாக சேர்க்கப்படுகின்றனர்.


