News May 14, 2024
பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல்

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதற்காக இன்று உ.பி வரும் பிரதமர் மோடி, காலை 10 மணி அளவில் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். இந்த தொகுதியில், ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில், காங்கிரஸ் சார்பாக ஆஜய் ராயும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக அதர் ஜமால் லரியும் களம் காண்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 1, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு!

மாதத்தின் முதல் நாளிலேயே சர்வதேச சந்தையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து மக்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. தற்போது 1 அவுன்ஸ் (28g) தங்கம் $170 (இந்திய மதிப்பில் ₹15,877) உயர்ந்து $4,696-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை $5 வரை உயர்ந்து 1 அவுன்ஸ் $74.88-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால், நம்மூர் சந்தையில் இன்று தங்கம் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
News April 1, 2026
இன்று அமலுக்கு வந்த புதிய வருமான வரி விதிமுறைகள்

கடந்த ஆண்டு மத்திய அரசு புதிய வருமான வரிச் சட்டத்தை அறிவித்தது. அந்த வரி மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. 64 ஆண்டுகள் பழமையான வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக வரும் புதிய சட்டத்தால், வரி விதிப்பு முறை எளிமையாகும் என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில், இந்த புதிய வருமான வரி சட்டத்தின் முக்கிய அம்சங்களை அறிய மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe செய்யவும்.
News April 1, 2026
பிரசாரத்துக்கு நடுவே திமுக ஆலோசனை கூட்டம்

ஒருபுறம் பிரசாரத்தை தொடங்கியுள்ள ஸ்டாலின், மறுபுறம் திமுக நிர்வாகிகளுக்கு அவ்வப்போது அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார். அந்தவகையில், நாளை மறுநாள் (ஏப்.3) ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து வேட்பாளர்கள், மா.செ.,க்கள் மட்டுமின்றி, ஒன்றிய, நகர செயலாளர்களும் கலந்துகொள்கின்றனர். பிரசாரத்தை வேகப்படுத்துவது தொடர்பாக ஸ்டாலின் அறிவுறுத்துவார் என கூறப்படுகிறது.


