News March 1, 2025
முதல்வர் ஸ்டாலினை வாழ்த்திய பிரதமர் மோடி

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். “தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டுகிறேன்” என தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அரசியல் களத்தில் பிரதமரும், முதல்வரும் இருவேறு துருவங்களாக இருந்தாலும், முதல்வருக்கு, பிரதமர் மோடி வாழ்த்துக் கூறியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
Similar News
News March 1, 2025
தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இ-மெயில் மூலம் வந்த மிரட்டலைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் பொதிகை இல்லத்தில் தங்கியிருந்த விருந்தினர்கள், ஊழியர்களை வெளியேற்றிவிட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி செல்லும் போது முதல்வர் ஸ்டாலின், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் இந்த இல்லத்தில் தான் தங்குவார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
News March 1, 2025
வங்கி கணக்குல கற்பனை பண்ண முடியாத பணம்!

உங்க வங்கி கணக்குக்கு திடீர்னு கற்பனை பண்ண முடியாத அளவு பணம் வந்தா என்ன பண்ணுவீங்க? அப்படி ஒரு ருசிகர சம்பவம்தான் அமெரிக்காவுல நடந்திருக்கு. அங்க இருக்கற சிட்டி பேங்க், தன்னோட கஸ்டமர் ஒருத்தரோட கணக்குல ₹24,000க்கு பதிலா ₹7000 லட்சம் கோடியை டெபாசிட் செஞ்சிருக்காங்க. இந்தத் தொகை எவ்வளவு பெருசுனு தெரியனும்னா, இந்தியாவின் GDPயே ஆண்டுக்கு ₹260 லட்சம் கோடிதான். இப்போ கற்பனை செஞ்சு பாருங்க.
News March 1, 2025
டிரம்ப் முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை: கேமரூன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கைகளால் அவரது முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை என்று பிரபல இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார். டைட்டானிக், அவதார் படங்களை இயக்கியிருக்கும் அவர், விரைவில் அமெரிக்காவில் இருந்து வெளியேறி நியூசிலாந்து நாட்டில் செட்டில் ஆகவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். டிரம்ப் ஆட்சி, மீண்டும் மீண்டும் ஏற்படும் கார் விபத்து போல இருப்பதாகவும் கேமரூன் விமர்சித்துள்ளார்.