News August 4, 2024
நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

ம.பி.யின் சாகரில் கோயில் சுவர் இடிந்து, 9 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் கூறியுள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், குழந்தைகளின் இழப்பை தாங்கும் சக்தியை அவர்களது குடும்பத்தினருக்கு, கடவுள் வழங்கட்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்துள்ளார்.
Similar News
News April 5, 2026
மேலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன்

27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ், மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில், அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் MP விஸ்வநாதன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கார்த்தி சிதம்பரம் ஒருவரையும், மாணிக்கம் தாகூர் மற்றொருவரையும் வேட்பாளராக கைகாட்டியதால் இழுபறி ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
News April 5, 2026
போர்.. டிரம்ப் பரபரப்பு அறிவிப்பு

போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் இறுதியாகாவிட்டால் ஈரான் நரகமாக மாறும் என எச்சரித்து, 48 மணிநேர கெடுவை <<19569828>>டிரம்ப் விதித்துள்ளார்.<<>> இதற்கிடையே, ஈரானில் தரைவழி தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாகவும், 300-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தீவிர தாக்குதலை நடத்த தயார் என்றும் அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், மேற்காசிய பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
News April 5, 2026
3 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்த தொகுதி!

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாளே எஞ்சியுள்ளது. இந்நிலையில், அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 84 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக மதுரை தெற்கு தொகுதியில் நாதக வேட்பாளர் உள்பட 3 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திமுக, அதிமுக வேட்பாளர்கள் கடைசி நாளான நாளை வேட்புமனுவை தாக்கல் செய்வார்கள் என தெரிகிறது. <<-se>>#TNElection2026<<>>


