News April 23, 2025
அஜித் தோவலுடன் பிரதமர் அவசர ஆலோசனை

காஷ்மீரில் கொடூர செயலில் ஈடுபட்டவர்களை விட்டு வைக்க மாட்டோம் என சபதம் செய்த பிரதமர் மோடி, டெல்லி வந்திறங்கியதும் விமான நிலையத்திலேயே ஆலோசனை மேற்கொண்டார். ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலைமை, குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் கேட்டறிந்தார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் அவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
Similar News
News November 4, 2025
யார் இந்த மனோஜ் பாண்டியன் ?

MGR ஆட்சிக் காலத்தில் 1985-89 வரை சபாநாயகராக இருந்த பி.ஹெச்.பாண்டியனின் மகன் தான், <<18194000>>மனோஜ் பாண்டியன்<<>>. பி.ஹெச்.பாண்டியன் தனது அரசியல் பலத்தால், 1993-ல் மனோஜ் பாண்டியனை அரசியலுக்கு கொண்டு வந்தார். அவரும் ஜெ.,வின் அன்பை பெற்று பல முக்கிய பொறுப்புகளை பெற்றார். 2001-ல் சேரன்மகாதேவியிலும், 2021-ல் ஆலங்குளத்திலும் போட்டியிட்டு MLA-வாக தேர்வானார். இதற்கிடையில், 2010-16 வரை ராஜ்யசபா MP-ஆகவும் இருந்தார்.
News November 4, 2025
வங்கியில் 750 காலியிடங்கள்: ₹48,480 சம்பளம்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள 750 Local Bank Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ★கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ★வயது: 20- 30 ★சம்பளம்: ₹48,480- ₹85,920 ★தேர்ச்சி முறை: Online Written Test, Local Language Proficiency Test & Personal Interview ★விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 23 ★முழு விவரங்களுக்கு <
News November 4, 2025
ஐடி கார்டு இல்லையென்றால் அனுமதியில்லை: தவெக

மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் நாளை தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், அழைப்புக் கடிதம் மற்றும் அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். எனவே, பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதம் மற்றும் கழக அடையாள அட்டையைக் கட்டாயம் தவறாமல் கொண்டு வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


