News September 5, 2024

பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் வாழ்த்து

image

பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நமது வீரர்களின் செயல்பாட்டால் இந்தியா பெருமை கொள்வதாகவும், இதுவரை இல்லாத வகையில் இந்த பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியர்கள் அதிக பதக்கங்களை வென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அதிக பதக்கங்களை வென்றது நமது வீரர்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் உறுதியை காட்டுவதாக வாழ்த்தியுள்ளார்.

Similar News

News July 11, 2025

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை தற்கொலைக்கு முயற்சி

image

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஒருவர் தற்கொலைக்கு முயன்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகிறது. இதில் பிராந்திய மொழி நிகழ்ச்சியில் காதல் தோல்வி காரணமாக டிவி நடிகை தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை தயாரிப்பு குழு கடைசி நேரத்தில் காப்பாற்றி விட்டதாகவும் இந்தி நிகழ்ச்சி தயாரிப்பு குழு நிர்வாகி கூறியுள்ளார். ஆனால் நடிகையின் பெயரை வெளியிடவில்லை.

News July 11, 2025

பெண்ணின் வாக்காளர் அட்டையில் நிதிஷ் புகைப்படம்

image

பீகாரில் பெண்ணின் வாக்காளர் அடையாள அட்டையில் CM நிதிஷ் குமாரின் புகைப்படம் இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை திருத்தத்தில் முகவரி மாற்றத்திற்கு மாதேபுராவை சேர்ந்த அபிலசா குமாரி விண்ணப்பித்துள்ளார். அதன்படி, முகவரி மாற்றப்பட்ட நிலையில், அபிலசாவுக்கு பதிலாக நிதிஷின் படம் இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News July 11, 2025

ராசி பலன்கள் (11.07.2025)

image

➤ மேஷம் – நிம்மதி ➤ ரிஷபம் – ஓய்வு ➤ மிதுனம் – ஜெயம் ➤ கடகம் – அமைதி ➤ சிம்மம் – வெற்றி ➤ கன்னி – நன்மை ➤ துலாம் – பகை ➤ விருச்சிகம் – ஜெயம் ➤ தனுசு – மறதி ➤ மகரம் – தோல்வி ➤ கும்பம் – அசதி ➤ மீனம் – வரவு.

error: Content is protected !!