News September 28, 2024
பாப்பம்மாள் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். x பக்கத்தில், பாப்பம்மாளின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. விவசாயத்தில் குறிப்பாக இயற்கை விவசாயத்தில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர். அவருடைய அடக்கம் மற்றும் கனிவான இயல்புக்காக மக்கள் அவரை நேசித்ததாக கூறிய அவர், எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News October 20, 2025
மாரி உலகத்தை விட்டு வெளிவர முடியவில்லை: லிங்குசாமி

மாரி செல்வராஜின் ‘பைசன்’ படத்தை பார்த்து இயக்குநர் லிங்குசாமி வெகுவாக பாராட்டியுள்ளார். ‘பைசன்’ படத்தை பார்த்துவிட்டு மாரியின் உலகத்தை விட்டு தன்னால் வெளிவர முடியவில்லை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். துருவ் விக்ரம், பசுபதி, லால் ஆகியோரின் கதாபாத்திரங்கள் அற்புதமாக எழுதப்பட்டு இருந்ததாகவும், நிவாஸ் கே பிரசன்னாவின் இசை படத்துக்கு உயிரூட்டியுள்ளதாகவும் அவர் சிலாகித்துள்ளார்.
News October 20, 2025
₹13,000 கோடியை அரசு செலவு செய்யவில்லை: தமிழிசை

தனிக்கை அறிக்கையின்படி மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட ஏறக்குறைய ₹13,000 கோடியை தமிழக அரசு செலவு செய்யவில்லை என தமிழிசை தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு வந்த உடன் எல்லோரும் சுத்தமாகி விடுவார்களா என திமுக கேட்கிறது என குறிப்பிட்ட அவர், எந்த வாஷிங்மெஷினில் போட்டு செந்தில்பாலாஜியை எடுத்தீர்கள் என பதில் கேள்வி எழுப்பியுள்ளார். செந்தில் பாலாஜி மீது ஊழல் வழக்கு போட்டதே திமுகதான் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
News October 20, 2025
பட்டாசு வெடிக்கும்போது கண்களை காப்பது எப்படி?

*பட்டாசு துகள் பட்டால் உடனே கண்களை தேய்க்கக் கூடாது. குளிர்ந்த நீரால் கண்களை கழுவுங்கள். இதனால் கண்ணுக்குள் விழுந்த மத்தாப்பு துகள், பட்டாசு துகள்கள் வெளியேறிவிடும். *பாதுகாப்புக்காக கண்ணாடி அணிந்து பட்டாசு வெடிக்கலாம். *குறைந்தபட்சம் 5 மீட்டர் இடைவெளியில் நின்றபடி வெடிக்கலாம். *வெடிகளை கையில் கொளுத்தி விளையாடுவதை தவிர்த்தால், கண்களை காக்கலாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.